1. வழிகாட்டிகள் திட்டம்
2. தைத் திட்டம்
3. இணை திட்டம்
4. ஜவ்வாது மலை பள்ளிகளில் நடக்ககூடிய பெல்லோஷிப்
சமீபமா நடந்த ஒரு பெல்லோஷிப் Training-ல முன்னாள் மாணவர்கள் பங்கேற்று இருந்தாங்க. அவங்களோடு கலந்துரையாடும் பொழுது, அவங்கட்ட அகரம் என்பது உங்களுடைய புரிதலில் என்ன என்பதை தெரிந்து கொள்ள கேட்டோம்? அவர்களுடைய பதிலை தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருந்தது.
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில் சொன்னார்கள். அதில் ஒரு தங்கை சொன்னார் ‘நான் தான் அகரம்’. அப்படின்னா என்ன சொல்ல வர என்று கேட்கும் பொழுது?
“நிறைய சவால்; நிறைய பிரச்சனை அப்படின்னு இந்த ரெண்டு வருஷத்துல பல விஷயங்கள் வந்திருக்கு. இந்த இரண்டு வருடமா வேலை செய்வதற்கு தோதனான சூழல் அங்க இல்லை. நிறைய விஷயங்கள் சரியில்லாமல் இருந்தது. பிரச்சனைகளை கண்டு காம்பரமைஸ் பண்ணாம, சுற்றிலும் நடப்பதை கண்டு தளர்ந்து போகாமல், Resilience-வோட எது பெரிசு புரிய வைச்சி எல்லாத்தையும் Face பண்றதுக்கு தைரியம் கொடுத்தது அகரம். அதற்கேற்றவாறு என்னை தயார்ப்படுத்தி தைரியமாகவும் விடாமுயற்சியுடனும் பயணித்து வருகின்றேன் அதனால் தான் அகரம் என்று சொன்னேன் என்றார்.
அப்படி சொல்லும் போது தான் இந்த சமுதாயத்திற்கான சரியான மாணவர்களை உருவாக்கி இருக்கோம் அப்படின்னு தோன்றுகிறது. முக்கியமாக இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குவதற்கு பலருடைய உழைப்பும், சிந்தனையும், விடாமுயற்சியும் அகரம் கூட இருந்து இருக்கு. அவர்கள் எல்லாருக்கும் நிறைய நிறைய நிறைய நிறைய நன்றிகள்.
அதே மாதிரி இந்த வருஷம் விதை திட்டத்தில் தமிழ்நாடு முழுக்க இருக்க மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர் கல்விக்காக வேலை செய்து வருகிறோம். அவர்களை கல்வியை நோக்கி கொண்டு செல்ல செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இப்படி பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்குவதற்கு அரசு பள்ளிகள்தான் நம்பிக்கையா இருக்கு. அந்த அரசு பள்ளிகள் நன்றாக செயல்படுவதற்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கும் பெற்றோர்கள் கண்டிப்பா அந்தந்த பள்ளியோடு இணையணும் என்கிற வேண்டுகோளை இந்த இடத்தில் வைக்கிறேன்.
பள்ளி மேலாண்மை குழுவுல கலந்துக்கோங்க. பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகளையும், உங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையும், எதிர்காலத்தையும், செம்மையாக்க பள்ளியோடு இணைஞ்சு வேலை செய்யுங்க.
பள்ளி மேலாண்மை குழு இரண்டு வருடத்திற்கு முன்பு மறு கட்டமைப்பு செய்யப்பட்ட பிறகு களத்தில் இருந்து அகரத்தின் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களோடு பேசும்போது ஏதோ ஒரு இடத்துல பள்ளி மேலாண்மை குழு Strong ஆ வேலை செஞ்சு, கண்டிப்பா ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பதை புரிஞ்சுக்க முடிகிறது. தொடர்ச்சியா அந்த நம்பிக்கையோட நம்ம பள்ளிகளில் பயணிக்க வேண்டியது இருக்கு.
கல்வி நம்ம எல்லோருடைய ஒற்றை நம்பிக்கை அந்த மாற்றத்தை எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்வதற்கு இங்கே காரணமாக இருந்தது வேலை செஞ்சிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லனும்.
மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள். ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது. இணைந்திருப்போம். அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் ”என்றார்.
விழா நிகழ்வை சென்னை ஆல்பா கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் சக்திவேல் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் படித்து வரும் விஜயலட்சுமி இருவரும் தொகுத்து வழங்கினர். எம்.ஜி.ஆர். மகளிர் கல்லூரியில் படித்து வரும் மகாலட்சுமி நன்றி கூறினார். பேராசிரியர் கல்யாணி, அகரம் தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
—————————
தொடர்புக்கு : 7871279066
STEM (Science, Technology, Engineering, Mathematics)
அகரம் பவுண்டேஷன் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ‘Women in STEM’ International Conclave நிகழ்வை அடிப்படையாக கொண்டு, STEM துறைகளில் உலக அளவிலான முன்னெடுப்புகளை உள்வாங்கி கொண்டு தமிழ்நாட்டின் சூழல் அடிப்படையில் நம் தமிழ் பெண்கள் முன்னிலை பெற சில பரிந்துரைகளை, உருவாக்கி இருக்கிறோம். இதனை ஊடகங்கள் பரவலாக மக்களிடம், கல்வியாளர்கள் மத்தியில் எடுத்து செல்ல கேட்டுக் கொள்கிறோம்.