
ஒரு மாஸ் நடிகராக ஜீவா அவதரிக்கும் இந்தப் படம் ஜீவாவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் வெளி வர உள்ள “சீறு” படத்தில் ஜீவாவுக்கு இணையாக புதுமுகம் ரியா சுமன் நடிக்க, நவதீப் வில்லனாக நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில், கே சம்பத் திலக் கலை வண்ணத்தில், கே கணேஷ் குமார் சண்டை காட்சி அமைக்க, ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, விவேகா பாடல் இயற்ற , ஏராளமான பொருட் செலவில் உருவாகும் “சீறு” இந்த வருடத்தின் முக்கியமான படமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.