வருடத்திற்க்கு 200 திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன ஆனால் ஜெயிப்பது விரல்விட்டு என்ன கூடிய படங்கள்தான்
அந்த ஜெயிக்கும் வரிசையில் வரவிருக்கும் திரைப்படம் தான் சாருகேஷி
60 70களில் வெற்றி பெற்ற நாடகங்களை படமாக்குவது வழக்கமாக இருந்தது ( எ க ) UAA நாடக குழுவின் கண்ணன் வந்தான் நாடகம் சிவாஜி நடிப்பில் ‘ கௌரவம் திரைப்படமாக வெளிவந்து மெகா வெற்றி பெற்றது.
அதேபோல் பல நாடகங்கள் திரைப்படமாகி இருக்கிறது. அந்த வரிசையில்
யு ஏ ஏ நாடக குழுவின் அடுத்த திரை வரவு ஒய் ஜி மகேந்திரன். நடித்த சாருகேசி நாடகம்
அதே தலைப்பில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது. இதன் பிரத்யேக காட்சி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக திரையிடப்பட்டது. அந்தப் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார், ஒய் ஜி மகேந்திரனை பாராட்டிய வார்த்தைகளுக்கு அளவே இல்லை
வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த படைப்பை தான் ரசித்து பார்த்ததாக பாராட்டினார்
சாருகேஷி இது ராகத்தின் பெயர். இந்த பெயரில் வரும் திருyge மகேந்திரன் அவர்கள் படத்தின் நாயகன் பெரும் இசைமேதை இவரின் இசைக்கு மயங்காத இசைபிரியர்கள் இல்லை இவர் மேடை ஏறினால் தாள சத்ததை மீறி கைதட்டல் காதை பிளக்கும். இவர் ஆலாபனை பண்ணாத ராகங்களே கிடையாது
இப்படிபட்ட மனிதருக்கு அல்சைமர் டிசிஸ் எனும் மறதி நோய் க்கு உள்ளாகிறார். இந்த நோய்க்கு உட்பட்டவர்கள் மனைவி மக்கள் நண்பர்கள் என் அனைவரைம் மறந்து தன்னையே யார்? என்று தெரியாமல் மறந்து விடுவார்கள். இந்த நோயின் தாக்கத்துக்கு ஆளான yGM நிலைமை என்ன ? கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அதிசயம் நடைபெறுகிறது. அது என்னவென்று திரையில் பாருங்கள்.
சிவாஜியின் நடிப்புலக வாரிசாக இளைய திலகம் பிரபு இருந்தாலும் சிவாஜியின் பக்தனாக அவரின் நடிப்பை தன்னுள் வாங்கி வெளிபடுத்தி வரும் yGM இந்த சாருகேசி திரைப்படத்தில் இசை நாயகனாக மிக எதார்த்தமாக தன் பங்களிப்பு பை வழங்கி இருக்கிறார்
அதுவும் இறுதி காட்சி கடற்கரையில் இசைக்கும் இசை- படம் பார்க்கும் நம்மை சீட்டு நுனிக்கு நம்மை வர வைத்து விடுகிறது.
ஒரு நகைச்சுவை நாயகனால் ஒரு சீரியசான கனமான கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு. பதில் அளிக்கும் வகையில் – ஒரு ரசிகனின் கேள்விக்கு -பதில் அளிக்கும் வகையாக மறைந்த கே.பாலசந்தர் தன்னுடை சிந்து பைரவி படத்தின் பாகம் 2 தொலைக்காட்சி தொடராக எடுக்கும் போது அதன் நாயகனாக yGe மகேந்திரன்அவர்களை தான் நடிக்க வைத்து ரசிகனின் கேள்விகளுக்கு முற்று புள்ளி வைத்து குணசித்திர நாயகனாக நடிக்க வைத்து K. பாலசந்தரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார் திரு y Ge மகேந்திரன் அவர்கள்
K.பாலசந்தரின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ய Y.G M அவர்கள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எதிர்பார்பை பூர்த்தி செய்யாமல இருப்பாரா?ஆம் பாட்ஷா வெள்ளி விழா படத்தை தந்த சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் தான் சாருகேசி படத்தின் இயக்குநர் படத்தை புல்லாங்குழலில் மெல்லிசையை மெதுவாக இசைத்து போல் இயக்கி இருக்கிறார்.
மற்றும் சுகாசினி, சமுத்திரகனி, சத்தியராஜ், தலைவாசல் விஜய், ஜெயபிரகாஷ், மதுவந்தி என ஒரு நட்சத்திர பட்டாளத்த்துடன் வெளிவருகிறது சாருகேஷி
அறிமுக நாயகன் ரித்விக் yGM அவர்களின் இளம் நாயகனாக அறிமுகமாகிறார் ,இவர் வேறு யாருமில்லை ஒய் ஜி மகேந்திரன் அவர்களின் பேரன்
மதுவந்தி அவர்களின் மகன்
இவரின் அறிமுகம் தமிழ் திரை உலகுக்கு ஒரு இளம் நாயகன் கிடைத்து விட்டார்
இசை தேவா. இவரின் கானா பாடல்களை நாம் கேட்டு ரசித்து இருப்போம். கர்நாடக இசையை இந்தப் படத்தில் வாரி வழங்கி இருக்கிறார். கானாவும் கர்நாடக இசையும் பாடும் என்று நிரூபித்திருக்கிறார் தேவா.
சாருகேசி -சந்தன மரத்தில் ஒரு புல்லாங்குழல்.