‘சென்ட்ரல்’ ஜாதிப் படமல்ல: இயக்குநர் பேரரசு!

ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ சென்ட்ரல் ”

ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பங்கேற்க, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

இந்நிகழ்வினில்….நடிகர் இயக்குநர் பேரரசு பேசியதாவது…

தயாரிப்பாளர் அறிமுகப்படம் இது அவர்களுக்கான மேடை, இந்தப்படத்திற்காக அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்கள். மூணு தயாரிபாளர்களும் வாத்தியார்கள். அவர்கள் உழைப்பில் இப்படத்தை கொண்டுவந்துள்ளனர். இயக்குநர் பாரதி கதை சொல்ல வந்த போதே நெகட்டிவ் பாத்திரம் என்றார், நான் முதலில் யோசித்தேன், ஆனால் கதை கேட்ட பிறகு மிகவும் பிடித்திருந்தது. விளிம்பு நிலை மக்களின் கதை நான் பார்த்த கதை, உடனே நடிக்கலாம் என முடிவெடுத்து விட்டேன். முதலில் ஜாதிப்படமோ எனத் தோன்றியது. இது விளிம்பு நிலை மக்கள் கதை தான், ஒரு ஜாதியினர் வலி சொல்லும் கதை தான், ஆனால் இன்னொரு ஜாதியினரை காயப்படுத்தும் கதை இல்லை. ஒரு ஜாதியினரை காயப்படுத்தி படமெடுப்பது சினிமாவுக்கு செய்யும் துரோகம் அது போல் இல்லாமல் பாரதி இப்படத்தை சிறப்பாக செய்துள்ளார். விக்னேஷ் மிகச்சிறப்பாக செய்துள்ளார். தர்ஷன், குணா இருவரும் சிறப்பாக செய்துள்ளனர். பெரிய படங்களுக்கு ரசிகர்கள் தான் சப்போர்ட், சின்னப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் தான் சப்போர்ட். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

முதலாளித்துவத்திற்கு எதிரான படைப்பாக, உழைப்பாளர்களுக்கு சாதி, மதம் ,மொழி, இனம் எதுவும் கிடையாது, அனைவரும் ஒன்றுதான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான காக்கா முட்டை விக்னேஷ் இந்த படத்தின் கதையின் நாயாகனாக நடித்துள்ளார்.
கதையின் நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மற்றும் சித்தா தர்ஷன், ஆறு பாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.