“சென்னையில் திருவையாறு” பருவம் 15 நிகழ்ச்சி நிரல்!

டிசம்பர் 18 முதல் 25 வரை, காமராஜர் அரங்கம் A/C, தேனாம்பேட்டை, சென்னை

தொடர்ந்து எட்டு நாட்களுக்கு காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மாபெரும் கர்நாடக சங்கீத நாட்டிய வைபவம்

“பஞ்சரத்னகீர்த்தனைகள்”:

“சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் துவக்க நாளான 18.12.2019 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை
விழா போல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியார், ஸ்ரீஹனுமன் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள்” விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு, சிறப்பு
சாஸ்த்ரிய சம்பிரதாய பூஜையுடன் காண்பதற்கு அரிய வைபவமாக விழா துவங்குகிறது.

தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றிணைந்து இசைத்துப் பாடுவதற்கு
அனைத்து பாடகர்களையும் இசைக் கலைஞர்களையும், அன்புடன் அழைக்கின்றோம்.

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நேரில் சென்று காண இயலாத இசை
ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் “சென்னையில் திருவையாறு” துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு “பஞ்சரத்ன கீர்த்தனை”களைக் கேட்டு இசையின்பம்
பெறவும், இறைவனருள் பெறவும் வேண்டுகிறோம்.

”சென்னையில் திருவையாறு” துவக்க விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் வைபவம் நிறைவுற்றதும் மாலை 4.00 மணிக்கு ”சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெறும்.

கவியரசு கண்ணதாசன் திருவுருவ மெழுகுச்சிலை

இசை விழாவின் துவக்க நாளான 18.12.2019 புதன்கிழமையன்று பிற்பகல் சென்னையில் திருவையாறு துவக்க விழாவின்போது காலத்தால் அழியாத கணக்கிலடங்கா
பாடல்களை தமிழ் திரையுலகிற்கு தந்த, தனது எழுத்தால் நம் அனைவரது உள்ளங்களையும் ஆட்கொண்ட ’கவியரசு கண்ணதாசன்’ அவர்களை கௌரவிக்கும் வகையில்
லண்டன் வேக்ஸ் மியூசியத்தில் உள்ளதைப்போல் தத்ரூபமான மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.ஜெகத்ரட்சகன், பின்னணி பாடகி இசையரசி பத்மபூஷண் திருமதி.பி.சுசீலா, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் திரு.தேவநாதன் யாதவ், கண்ணதாசன் அவர்களின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அனுமதி இலவசம்

இவ்வருடம் 15 ஆம் ஆண்டை முன்னிட்டு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். இருப்பினும் ரசிகர்கள் தங்களது இருக்கையை உறுதிசெய்துகொள்ள நன்கொடையாளர் சீட்டுகளும் (Donor Pass) வாங்கிக்கொள்ளலாம்.

இருக்கைகள் நன்கொடையாளர் சீட்டுகள் வைத்திருப்பவர்களுக்கும், முதலில் வருபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

ரசிகர்களுக்கான இலவச இரவுப் பேருந்து:

ரசிகர்களின் வசதிக்காக தினமும் இரவு 7.15 மணி காட்சி நிறைவுற்றதும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வசதியாக சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காமராஜர் அரங்கத்திலிருந்து இரவு 9.30 மணிக்கு மேல் இலவசமாக பேருந்துகள் (Free Buses) இயக்கப்படும். இலவச பேருந்தில் செல்ல விரும்புவோர் தங்கள் பெயரையும், செல்லவேண்டிய இடத்தையும், உடன் வருவோர் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு 98416 72777, 98416 98499 ஆகிய எண்களில் ஒன்றிற்கு எஸ்.எம்.எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் (Whatsapp) செய்து தங்கள் இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம்.
பேருந்துகள் உதவி : ஸ்ரீ பாக்யலஷ்மி டூர்ஸ் & டிராவல்ஸ். மேலும் விவரங்களுக்கு
044 – 4666 4666, www.sblt.co.in

உணவுத் திருவிழா:

50,000 சதுர அடியில் பிரம்மண்டமான உணவரங்கம், 60 உணவகங்கள், 500க்கும் மேற்பட்ட உணவு வகைகள், புகழ்வாய்ந்த சமையற்கலை வல்லுநர்களின் செய்முறை விளக்கம், சமையற்கலை போட்டிகள், சமையற்கூட உபகரணங்கள், ஆரோக்ய உணவு வகைகள், மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் செயல்முறைகள், காய்கனி சிற்ப கண்காட்சிகள், திரைப்பட நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.

முதியோர்களுக்கு சேவை:

இந்த இசை விழாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக, முதியவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து
தினந்தோறும் 500 மூத்த குடிமக்கள் தனி பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள்.
அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாமசங்கீர்த்தனம்,
உபன்யாசம், பக்தி பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

முதியவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு திரும்புகின்ற பொழுது அவர்கள் அனைவருக்கும்
பிரசாதம் மற்றும் காபி வழங்குவதுடன் அத்தியாவசியப் பொருட்கள், ஆன்மிக புத்தகங்களின்
குறிப்பேடுகள், முதலுதவி உபகரணங்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்துண்டு, குளிருக்கான ஆடைகள், பேனா, தொலைபேசிக் குறிப்புப் புத்தகங்கள் ஆகியன அடங்கிய விசேஷ கைப்பை
ஒன்றும் வழங்கப்படுகிறது.

இலவச மருத்துவ முகாம்:

சென்னையில் திருவையாறு இசை விழாவிற்கு வரும் ரசிகர்கள், காமராஜர் அரங்க நுழைவுவாயிலில் அரிமா சங்க உதவியுடன் அமைக்கப்படும் இலவச மருத்துவ முகாமில்
பங்கேற்று… உடல் எடை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் மற்றும் பல் பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவ சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் திருவையாறு சங்கீத நாட்டிய விழா அட்டவணை

சென்னையில் திருவையாறு சங்கீத நாட்டிய விழா அட்டவணை – டிசம்பர் 18 முதல் 25 வரை

18 டிசம்பர் 2019 – புதன்கிழமை
காலை 10.15 மணி நாதஸ்வரம் – டி.ஜெ.சுப்பிரமணியம்
பிற்பகல் 3.00 மணி பஞ்சரத்ன கீர்த்தனைகள்
பிற்பகல் 4.00 மணி “சென்னையில் திருவையாறு” துவக்க விழா மற்றும் “கவியரசு கண்ணதாசன்” அவர்களின் திருவுருவ மெழுகுச்சிலை திறப்பு
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – பியானோ அனில் ஸ்ரீனிவாஸ்
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – மஹதி

19 டிசம்பர் 2019 – வியாழக்கிழமை
காலை 7.00 மணி நாமசங்கீர்த்தனம் – உடையாளூர் கல்யாணராமன்
காலை 8.30 மணி ஆண்டாள் கல்யாணம் ( ) – வனிதா சுரேஷ், சௌம்யா ஆச்சார்யா
காலை 9.45 மணி வாய்ப்பாட்டு – காரைக்கால் ஜெய்சங்கர்
காலை 11.00 மணி வாய்ப்பாட்டு – பாலக்காடு ராம்பிரசாத்
மதியம் 1.00 மணி வாய்ப்பாட்டு – ஸ்ருதி எஸ். பட்
மதியம் 2.45 மணி வாய்ப்பாட்டு (சாய்பாபா பாடல்கள்) – டாக்டர் கணேஷ்
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – கர்னாடிகா பிரதர்ஸ், செங்கோட்டை ஹரி
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – உன்னிகிருஷ்ணன்

20 டிசம்பர் 2019 – வெள்ளிக்கிழமை
காலை 7.00 மணி சொற்பொழிவு – கடையநல்லூர் துக்காராம் கணபதி
காலை 8.30 மணி பரதநாட்டியம் – ஸ்ரீ அன்னை நாட்டியாலயா
காலை 9.45 மணி பரதநாட்டியம் – பத்மினி கிருஷ்ணமூர்த்தி
காலை 11.00 மணி வாய்ப்பாட்டு – சேர்த்தலை ரங்கநாத சர்மா
மதியம் 1.00 மணி பரதநாட்டியம் – நிஷா தேவி
மதியம் 2.45 மணி வாய்ப்பாட்டு – சுசித்ரா, வினையா & வித்யா
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – சந்தீப் நாராயணன்
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – அபிஷேக் ரகுராம்

21 டிசம்பர் 2019 – சனிக்கிழமை
காலை 7.00 மணி பக்தி சொற்பொழிவு – மங்கையர்க்கரசி
காலை 8.30 மணி பரதநாட்டியம் – குரங்கனி நிஹாரிகா பெரியசாமி
காலை 9.45 மணி வாய்ப்பாட்டு – கலா ஐயர்
காலை 11.00 மணி வாய்ப்பாட்டு – அனந்து
மதியம் 1.00 மணி பரதநாட்டியம் – நாட்டியரஞ்சனி
மதியம் 2.45 மணி பரதநாட்டியம் – கவிதா ராமு
மாலை 4.30 மணி வீணை – ராஜேஷ் வைத்யா, மேண்டலின் – யு. ராஜேஷ்
இரவு 7.15 மணி ஃப்யூஷன் – உமையாள்புரம் சிவராமன், ஸ்டீபன் டெவசி, பரத் சுந்தர்

22 டிசம்பர் 2019 – ஞாயிற்றுக்கிழமை
காலை 7.00 மணி வாய்ப்பாட்டு – ருக்மணி ரமணி
காலை 8.30 மணி பரதநாட்டியம் – புவனேஸ்வரி வி. கௌசிக்
காலை 9.45 மணி பரதநாட்டியம் – பூஜா சீனிவாச ராஜா
காலை 11.00 மணி வாய்ப்பாட்டு – ஷீலா உன்னிகிருஷ்ணன்
மதியம் 1.00 மணி பரதநாட்டியம் – ஸ்ருதிலேகா
மதியம் 2.45 மணி வயலின் – லலிதா நந்தினி
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – அருணா சாய்ராம்
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – திருச்சூர் பிரதர்ஸ்

23 டிசம்பர் 2019 – திங்கள்
காலை 7.00 மணி சொற்பொழிவு – தீபிகா
காலை 8.30 மணி வாய்ப்பாட்டு – தெய்வநாயகி ஹரிஹரன், வசந்தி ஹரிஹரன்
காலை 9.45 மணி பரதநாட்டியம் – ஸ்ரீ காலாஸ்ரீ நடனப்பள்ளி நிரஞ்சனா
காலை 11.00 மணி வயலின் – மணிபாரதி
மதியம் 1.00 மணி வாய்ப்பாட்டு – அட்லாண்டா சகோதரிகள் ஸ்ரீவர்ஷினி & நித்யஸ்ரீ
மதியம் 2.45 மணி ஃப்யூஷன் – ப்ரவாகம்
மாலை 4.30 மணி வயலின் & வாய்ப்பாட்டு – குமரேஷ், ஜெயந்தி குமரேஷ்
இரவு 7.15 மணி பரதநாட்டியம் – பிக்பாஸ் அபிராமி

24 டிசம்பர் 2019 – செவ்வாய்
காலை 7.00 மணி வாய்ப்பாட்டு – சுதா ராஜா
காலை 8.30 மணி வாய்ப்பாட்டு – சஷாங்க்
காலை 9.45 மணி பரதநாட்டியம் – ரசிகா டான்ஸ் அகாடமி – சிட்னி
காலை 11.00 மணி பரதநாட்டியம் – சுபத்ரா மாரிமுத்து
மதியம் 1.00 மணி பரதநாட்டியம் – வேலம்மாள் பள்ளி மாணவிகள்
மதியம் 2.45 மணி வீணை – ரேவதி கிருஷ்ணா
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – எஸ். செளம்யா
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – சுதா ரகுநாதன்

25 டிசம்பர் 2019 – புதன்
காலை 7.00 மணி வாய்ப்பாட்டு – டாக்டர் கணேஷ்குமார்
காலை 8.30 மணி பாரதியார் – மஹதி அகாடமி மாணவர்கள்
காலை 9.45 மணி பரதநாட்டியம் – திருக்குறள் – மயூரி அகாடமி
காலை 11.00 மணி வீணை – நிர்மலா ராஜசேகர்
மதியம் 1.00 மணி வாய்ப்பாட்டு – அநேகா சீனிவாசன் ஆஸ்திரேலியா
மதியம் 2.45 மணி வாய்ப்பாட்டு – ஷோபா சந்திரசேகர்
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – நித்யஸ்ரீ மகாதேவன்
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – கார்த்திக்

மேலும், விவரங்களுக்கு
www.lakshmansruthi.com