‘சென்னையே மீண்டு வா’ ஆல்பம்!

plt‘சென்னையே மீண்டு வா’ ஆல்பம் பற்றி!
சென்னை  மழையில் மூழ்கிய நாட்களின் வலிகளையும் மழையில் இருந்து மீண்டு வரும் வழிகளையும் வரிகளாய் இசையாய் பதிவு செய்ய விழைந்தோம். தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் தந்த சிந்தனையில் பா.விஜயின் கவிதையை சத்யன் இசைகொடுக்க ஏராளமான பிரபல பாடகர்களின் குரல் இணைத்து வெளிவரும் பாடல் இது..
சென்னையே மீண்டு வா
சென்னை போல் மீண்டும் வா
பல்லவி
வந்தாரை
வாழவைத்த சென்னை
மறுபடியும்
வாழ வைப்போம் உன்னை
சென்னையே மீண்டு வா
சென்னைபோல் மீண்டும் வா
2016 is waiting for u
Don’t worry every body
Working for u
சென்னையே மீண்டு வா
சென்னைபோல் மீண்டும் வா
வீட்டுக்கு உள்ளே
மழை நீர் போனது
வீதியை விட்டு
பிரிவுகள் போனது
நகரம் முழுக்க
நதியில் தொலைந்தது
நம்பிக்கை மட்டும்
மேலே மிதந்தது
புயலாலே சாய்ந்த
சென்னையை
நாம் சேர்ந்து
புதிதாக மாற்றுவோம்
நம் அன்னையை
 சரணம்
நகரம் எங்கும்
உடைந்த சாலைகள்
ஆனால் அதில்
உள்ளம் உடையாத பயணங்கள்
ஊர் முழுதும்
குப்பை கூளங்கள்
ஆனால் உதவும்
பரிசுத்த உள்ளங்கள்
வீதிகள் இங்கே
ஆயிரம் உள்ளது
இதயம் எல்லாம்
ஒன்றாய் ஆனது
நீரில் வீடுகள்
மூழ்கிப் போனது
மனித நேயம்
வெளியே வந்தது
கை நீட்டிய திசையெல்லாம்
உதவிக்கரம்  நீள்கிறதே
அழும் கண்ணீர் துடைக்கத்தான்
ஆந்திராவும் வருகிறதே
மலையாள மண்ணின் உதவிகள்
மலை மலையாய் குவிகிறதே
மதங்கள் எல்லாம்
வெளியே போனது
மனித நேயமே
நகரம் ஆனது
ஜாதி பேதங்கள்
ஊமை ஆனது
அன்பும் இரக்கமும்
மொழியாய் மாறுது
பணத்தில் உயர்ந்தவன்
தெருவில் நின்றான்
உதவி செய்தவன்
பணத்தை வென்றான்
யார் யாரோ என்றே
எல்லோரும் இருந்தோம்
தண்ணீரில் தவித்து
ஒன்றாகி எழுந்தோம்!