சென்னை சாலிகிராமத்தில் புதிதாக உதயமான Zoom Film academy  !

மிகக்குறைந்த கட்டணத்தில் டைரக்சன் மற்றும் நடிப்பு பயிற்சி அளிக்கும் Zoom Film academy   
 
 சினிமாவில் நடிக்கவேண்டும், படம் இயக்கவேண்டும் என்கிற கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களுக்கு அதுகுறித்த முறையான பயிற்சி அளிக்கும் பயிற்சிக்கூடங்கள் தான் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன. 
 
ஆனால் சென்னையில் மிக குறைந்த அளவிலேயே இந்த பயிற்சிக்கூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சிக்கூடமாக உதயமாகி உள்ளது Zoom Film academy. 
 
இதனை குறும்பட இயக்குநர் ஷங்கர் துவக்கியுள்ளார். இது ஒரு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
6 மாத கால பயிற்சி வகுப்புகள் தொலைநோக்குப் பார்வையோடு சினிமாவை கையாளும் வண்ணம் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
 நேற்று நடைபெற்ற இந்த பயிற்சிக்கூட திறப்புவிழாவில் பிரபல இயக்குநர் கே.எஸ்.அதியமான், டூ லெட் பட கதாநாயகி ஷீலா, கவிஞர் இளையகம்பன், நடிகர் ராஜ்கமல், ‘தொட்ரா’ வில்லன் எம் எஸ் குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். 
 
சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரில் சுமார் 3000 சதுர அடி பரப்பளவில் விஸ்தாரமாக அமைந்துள்ளது இந்த Zoom Film academy.. 
 
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த பயிற்சிக்கூடத்தில் வகுப்பறை, நூலகம், ஒர்க் ஷாப், பிரிவியூ தியேட்டர், என மாணவர்களுக்கான சகல வசதிகளும் இடம் பெற்றுள்ளன. 
 
திரைக்கதை – டைரக்சன் மற்றும் நடிப்புக்கு என இரண்டு படிப்பு பிரிவுகள் இருக்கின்றன. 
 
6 மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கு கட்டணமாக ரூ.39,000/- மட்டுமே வசூலிக்கப்படுகிறது… 
 
மற்ற பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்த கட்டணம் வெகு குறைவு. 
 
திங்கள் முதல் வெள்ளி வரை காலையில் 3 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.. 
 
மதியத்திற்கு மேல் நூலகம், பிரிவியூ தியேட்டர் ஆகியவற்றில் மாணவர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சர்வதேச சினிமா குறித்த தகவல்களையும் சர்வதேச திரைப்படங்களையும் பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. 
 
ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, அதேசமயம் இந்த துறையில் நுழைய விரும்புவர்களுக்காக சனி, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மட்டும் தினசரி 8 மணி நேரம் இதே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 
 இரண்டு விதமான வகுப்புகளுக்கும் ஒரேவிதமான கட்டணம் தான்.
 
ஒரு குழுவுக்கு (Batch) 5 மாணவர்கள் என மொத்தம் 20 மாணவர்கள் மட்டுமே ஒரு வகுப்பில் இடம்பெறுகின்றனர். 
 
நான்கு மாத காலம் தியரி வகுப்புகளை முடித்தவர்களுக்கு இரண்டு மாத காலம் பிராக்டிகல் வகுப்புகள் அதாவது ஒர்க் ஷாப் நடத்தப்படும். 
 
இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு குழுவுக்கும் கிட்டத்தட்ட 1௦ குறும்படங்கள் இயக்குவதற்கான வாய்ப்பும் தரப்படும்.. 
 
இதற்கு தேவைப்படும் கேமரா உள்ளிட்ட உபகரணங்களையும் அவர்களே வழங்குகிறார்கள். 
 
டி.எப்.டி முடித்த, திரைத்துறையில் குறைந்தது பத்து வருடங்களுக்கு மேல் அனுபவமிக்க, பல படங்களை இயக்கிய இயக்குநர்கள் தான் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர். 
 
அதுமட்டுமல்ல திரையுலகில் தற்போது பிரபல இயக்குநர்களாக இருப்பவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை மாணவர்களுக்கு பாடம் நடத்த இருக்கின்றனர். 
 
இதற்கென எந்த கட்டணமும் தனியாக வசூலிக்கப்படுவது இல்லை.  
 
மேலும் குறும்பட இயக்குநர்கள்
இந்திய மற்றும் சர்வதேச குறும்பட திருவிழாக்களில் கலந்துகொண்டு போட்டியிட்டுவதற்கான வழிகாட்டும் பணியையும் இந்த Zoom Film academy மேற்கொள்கிறது..