காட்ஸ் ஆப் ஈஜிப்ட், பேட்மேன் vs சூப்பர்மேன், மேகானிக் – ரீசரக்ஷன் உள்ளிட்ட பல பிரபல ஆங்கிலப்படங்களையும், பாகி, அசார், உத்டா பஞ்சாப், ரஸ்டம் உள்ளிட்ட பல பிரபல ஹிந்தி படங்களையும் விநியோகம் செய்த E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான “பலம்” (காபில் – தமிழ் பதிப்பு) படத்தை வெளியிடுகின்றது.
கதை:
31 வயதான பின்னணிக் குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்க்கையை ஸ்டுடியோக்களிலும், இரவை தனது இல்லத்திலும் கழிக்கிறான்.
பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதாரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவை சந்திக்க நேரும் அவன் அவள் மீது காதல் வயப்படுகிறான்.
ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளைக் கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்வில் எதுவும் சாத்தியமே என்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரோஹன், சுப்ரியாவைப் பிரிய நேரிடுகிறது.
சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள்ளித் தனிமைப் படுத்துகிறது. சுப்ரியா பிரிவின் காரணத்தை ஆராய முற்ப்படும் ரோஹனுக்கு, தன்னை சுப்ரியா பிரிந்ததற்கான உண்மை புலப்படுகிறது.
தன்னை தனிமைப் படுத்தியவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபடுகிறான் ரோஹன். ரோஹன் லட்சியத்தை அடைவதை எந்த ஒரு சக்தியும் தடுக்க போவதில்லை.
இதுதான் கதை. ஜனவரி 25 -ல் ஹ்ரித்திக் ரோஷனின் ‘பலம்’ தமிழில் வருகிறது !