சென்னையில் இயங்கும் இன்னொரு தயாரிப்பாளர் சங்கமான ‘தயாரிப்பாளர் சங்கம் கில்டு ‘ சங்கத்ததில் பிரச்சினை உள்ளது என்றும் ஜாக்குவார் தங்கத்திடமிருந்து அதை மீட்கும் நோக்கில் ஒரு மீட்புக்குழு உருவாகியுள்ளது. அம்மீட்பு குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் சென்னை வடபழனியில் நடந்தது. வரும் புதன்கிழமை அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாகச் சென்று கில்டு அலுவலகத்தை ஜாக்குவார் தங்கத்திடம் இருந்து மீட்க முடிவு செய்துள்ளார்கள். அவர்கள் தற்போதைய செயலாளர் ஜாக்குவார் தங்கம் மீது அடுக்கடுக்காகப் புகார் சொல்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய தேர்தல் 4 ஆண்டாகியும் நடைபெற வில்லை.
தேர்வு பெற்ற எல்லா நிர்வாகிகளையும் நீக்கிவிட்டு ஜாக்குவார் தங்கம், அவரது மகன், அக்காள் மகள், உறவினர் என ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சங்கம் செயல் படுகிறது.
எதிர்த்து கேட்கிறவர்கள் மீது பாலியல் புகார், பணம் கையாடல் என்று புகார் கூறி சில காவல்துறை அதிகாரிகளின் துணையோடு ஜாக்குவார் தங்கம் செயல்படுகிறார் என்றும் உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் ஆவேசப்பட்டனர்.
மேலும், கில்டு தலைவர் பதவியில் செயல்படத் தடை விதித்து ஜாக்குவார் தங்கத்துக்கு கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் தொடர்ந்து சங்கத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதால் அதைத் தடுத்து சங்கத்தை மீட்பதற்காக புதன்கிழமை காலை 11 மணிக்கு உறுப்பினர்கள் கில்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு மீட்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில்குருசூரியா மூவீஸ் ஆர்.கே.அன்புச்செல்வன்,திருக்கடல் உதயம் போன்ற தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.