அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஃபேண்டஸி திரில்லராக உருவாகி வரும் “இம்மார்டல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
முன்னணி திரை நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மிக வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், டிராகன் படம் மூலம், இளைஞர்கள் மனதைக் கொள்ளையடித்த கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.
இளைஞன் வாழ்வில் தீடீரென நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் என்பதன் பின்னணியில், அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன், கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, கேரளா முதலான பகுதிகளில் நடந்துள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பதால், படத்தில் சிஜி,விஷுவல் எஃபெக்ட்ஸ், காட்சிகள் அதிக அளவில் உள்ளது எனும் நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.