ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றிக்கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த கோபால், மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
சித்து குமார் இசையமைக்க, CM மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். JF காஸ்ட்ரோ எடிட்டராகவும், PS ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன், கோட்டேஷன் கேங் புகழ்), ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, சட்டம் என் கயில், பீட்சா 3), நடன இயக்குனர் – சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, சிறை), ஆகியோர் பணியாற்றுகின்றனர்.