ஒரு பயணியின் வழியில் வாழ்க்கையின் உயிர்த்துடிப்பை விவரிக்கும்
“மந்திர சுவடுகள்”நூல் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
தென் இந்தியாவில் பட்டுப் புடவைகள் விற்பனையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீ பாலம் சில்க் சாரீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், வாழ்வியல் கலையில் தனித்திறன் பெற்றவருமான திருமதி. ஜெயஸ்ரீ ரவியின், கைவண்ணத்தில் முதல் முறையாக உருவாகியுள்ள“மந்திர சுவடுகள்” என்கிற புத்தகத்தின் வண்ணமயமான வெளியீட்டு விழா, நேற்று மாலை நடைபெற்றது.
“வாழ்க்கை கடினமானது. அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வையே வாழ விரும்புகிறோம். வாழ்க்கையின் 16 விதிகளை நாம் அறிந்துகொண்டால், எந்த கஷ்டமும் நமக்கு ஏற்படாது. எந்த அச்சமும் இன்றி வாழ்க்கையை சந்தோசமாக வாழ தயாராகுங்கள்”என்கிறது மந்திர சுவடுகள் நூல்.
சிக்கல் மிக்க வாழ்க்கையை எளிதாக வாழ சட்ட திட்டங்கள் கைகொடுக்கின்றன. அப்படி இருந்தும் இந்த வாழ்க்கை எளிதாகத்தான் உள்ளதா என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது ஜெயஸ்ரீ எழுதியுள்ள இந்த “மந்திர சுவடுகள்”- ஒட்டு மொத்த வாழ்க்கையையும் எட்டாக பிரித்தனர் அன்றைய சித்தர்கள். ஆனால், அவற்றை மேலும் நுண்மைப்படுத்தி பிரபஞ்ச நியதிகள் உதவியுடன், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை தியானம் மற்றும் ஆழமான சிந்தனை மூலம் கண்டறிந்துள்ளார் ஜெயஸ்ரீ ரவி. தான் கண்டறிந்ததை 16 தங்க விதிகளாக தொகுத்து தந்துள்ள புத்தகம் தான் “மந்திர சுவடுகள்”.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என இரு மொழிகளில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பெருமைமிகு விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு டாக்டர் நல்லி குப்புசாமி, டாக்டர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, டாக்டர் நிர்மலா பிரசாத் மற்றும் திரு.சி.கே.குமரவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்
இந்த புத்தகம் பற்றி ஆசிரியர் திருமதி.ஜெயஸ்ரீ கூறுகையில்,
”காரணம் மற்றும் விளைவுகளின் தொகுப்பே வாழ்க்கை என்பதை நான் முன்கூட்டியே உணர்ந்தேன். ஒரு விஷயம் சரியாக அல்லது தவறாக இருக்க முடியும். இரண்டுமாக இருக்க முடியாது. இந்த தலைப்பை பற்றி மேலும் அறிய விரும்பிய என்னை பிரபஞ்ச நியதிகள் வழி நடத்தியது. எனினும், வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் அவை வழிகாட்டவில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆழ்ந்த தியானத்தின் மூலம், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ரகசிய பகுதியாக திகழ்வது 5 துணை விதிகளே என்ற முடிவுக்கு நான் வந்தேன். இளையோர், முதியோர் என்றில்லாமல் அனைத்து தரப்பினரையும் இந்த எளிமையான விதிகள் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேன். வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க இனியும் தாமதிக்கக் கூடாது.”
“மந்திர சுவடுகள்” முன்னுரையின் ஒரு பகுதி:
வாழ்க்கை கடினமானது. அதுரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல . வாழ்க்கை உண்மையானதல்ல. இது அனுபவித்தே தீர வேண்டிய ஒரு விதி என்ற மனிதனுக்கு உள்ள தவறான கருத்துக்களை உடைக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு சரி என்று படும் ஒரு விஷயம், மற்றவர் பார்வையில் தவறாக இருக்கலாம். நமக்குள் ஆழமாக நச்சரித்துக் கொண்டிருக்கும் பதில் கிடைக்காத பல கேள்விகள் உள்ளன. வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எதுவும் உள்ளதா? நாம் ஏன் துன்பப்பட வேண்டும்? எது சரி அல்லது தவறு? என வெறுப்பு ஏற்படுகிறது. வாழ்க்கையின் விதிகளை நாம் அறிந்தால், நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மறுபுறம், வாழ்க்கையின் விதிகளை நாம் அறிந்தால், வாழ்க்கை முழுவதையும் சந்தோசமாக வாழ முடியும்.இதோ இந்த 16 தங்க விதிகள் மூலம், வாழ்க்கையை துன்பம் இன்றி மகிழ்ச்சியாக வாழ முடியும்.
திருமதி. ஜெயஸ்ரீ ரவி பற்றி..
சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஜெயஸ்ரீ ரவி, வாழ்க்கை திறன் பயிற்சியாளர். தென் இந்தியாவில் பட்டுப்புடவைகள் விற்பனையில், மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீ பாலம் சில்க்ஸ் சாரீஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர், தனது கணவர், மகன், மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். டாக்டர் நல்லிகுப்புசாமி தம்பதிக்கு மகளாக பிறந்த இவர், குடும்பப் பாரம்பரியமான பட்டுப்புடவைகள் விற்பனையோடு எழுத்து துறையையும் விரும்பி தேர்வு செய்தார்.