‘ஜெயிலர்’ தன் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று அந்தப் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்ணா கூறி உள்ளார் .அவர் தனது மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்:
‘ஜெயிலர் ‘ என் வாழ்க்கையில் முக்கியமான படம்.
இந்த வாய்ப்புக்காக இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு நான் நன்றியைச் சொல்கிறேன். அவர் நான் ஏற்ற பாத்திரத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து எனக்குக் கொடுத்த வாய்ப்புக்காக நன்றி கூறுகிறேன். சூப்பர் ஸ்டார் உடன் நடிப்பது எந்த ஒரு நடிப்புக்கலைஞருக்கும் ஒரு கனவாக இருக்கும் .அந்தக் கனவு என் வாழ்க்கையில் இவ்வளவு விரைவில் நிறைவேறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.அதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்கிறேன் .சூப்பர் ஸ்டார் அவர்களுடன் 35 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது அவரிடம் இருந்து ஏராளம் கற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள். படம் வெளியான பிறகும் கூட எனக்கு அப்படிப்பட்ட சந்தோஷங்கள் கிடைத்து வருகின்றன. மக்களின் அன்பு கிடைத்து வருகிறது. அனைவருக்கும் நன்றி. குறிப்பாக என்னை மக்களிடம் எடுத்துச் சென்ற ஊடகங்களுக்கும் நன்றி. எ இவ்வாறு மிர்ணா கூறியுள்ளார்.