
அறுபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பர படத்தின் பின்னணி இசைக்காக யுவன்ஷங்கர் ராஜா உபயோகப்படுத்தி இருக்கும் ‘வயோலா’ ரக இசை கருவியும், ‘கியூபா’ நாட்டின் பிரசித்தி பெற்ற ‘மாம்போ’ தாளங்களும், ரசிகர்களுக்கு ஒரு ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது . பிரபல ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனிற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் செய்தி, தற்போது இந்திய திரையுலகினரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.