ஆவி பழிவாங்கும் கதைதான் ‘டார்லிங்’
முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம் என்று சொல்லும்படி வந்துள்ள படம். பிரபலம் என்கிற பலத்துக்காக ஜிவி பிரகாஷை நாயகன் ஆக்கியுள்ளார்கள்.
ஒரு பெரிய தனியான விடுதி போன்ற வீட்டில் காதல் ஜோடி ஒன்று தங்க வருகிறது. அங்கு வரும் கயவர்கள் காதலனைத்தாக்கி அவன் கண்ணெதிரே காதலியை சீரழிக்கிறார்கள். பிறகு அவனைக்கொன்றும் விடுகிறார்கள்.இறந்த அவளின் ஆவி விடுதிக்குள் தங்கி வந்தவர்களை சாகடிக்கிறது.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அங்கு ஜீவி பிரகாஷ், பாலா, நிக்கி கல்ராணி வருகிறார்கள். கூடவே கருணாசும் இணைந்து கொள்கிறார். சாவதற்கு நாள் குறிக்கிறார்கள். மூன்று நாள் ஒத்திப் போட சொல்கிறார் பாலா. அங்கு நிக்கி கல்ராணி வந்திருப்பது சாக அல்ல காதலைச் சொல்ல என்று பிறகு புரிகிறது. ஏற்கெனவே சிருஸ்டியின் காதல் தோற்ற சோகத்தில் ஜீவி .பிரகாஷ் இருக்கிறார். அவரை தேற்றி நிக்கியை விரும்ப வைக்கிறார் பாலா, அருகில் ஜீவி நெருங்கிடும் போது உள்ளுக்குள் இருக்கும் ஆவி மிரட்ட பயந்து விடுகிறார் ஜீவி. விசாரித்தால் பாதிக்கப்பட்ட ஆவி இருப்பது தெரிகிறது. தன் இந்த நிலைக்குக் காரணமானவர்களைத் தேடிக் கண்டு பிடிக்காவிட்டால் தொட விடமாட்டேன் என்கிறது. தேடி அவர்களை தண்டித்து எப்படி ஆவியிடமிருந்து ஜீவி காதலியை மீட்கிறார் என்பதே கதை.
படத்தின்முற்பாதியில் பாலா, கருணாஸின் காமெடியில் கதை நகர்கிறது. பிற்பாதியில் ஆவியின் பேய் ஆட்டம் ஆரம்பித்து கிடுகிடுக்க வைக்கிறது. ஜீவி. பிரகாஷுக்கு அளவான வாய்ப்பு அப்பாவி தோற்றத்தில் பொருந்துகிறார். நிக்கி கல்ராணி அழகில் ரசிக்கவும் பேயாக அலறவும் வைக்கிறார். ஒலி ஒளியும் மிரட்டுகின்றன .இதைக் காதல் பின்னணியில் ஒரு பேய்ப்படம் எனலாம் .இந்தக்குழுவிடம் இன்னமும் எதிர் பார்த்தோம் இயக்குநர் சாம் ஆண்டன் சிரிப்பு, பயமுறுத்தல்களில் ஒரு பேய்ப்படம் கொடுத்து பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.