
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அலுவலகத்திற்குச் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வருகை தந்தார். வந்தவர் சந்திரசேகருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். அத்தோடு படமாகவுள்ள தன் வாழ்க்கைக் கதையான டிராஃபிக் ராமசாமி படத்தைப் பற்றியும் ஆவலாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இயக்குநர் விஜய்விக்ரம் உடன் இருந்தார்.