

இப்படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்ன்ன ஆகியோர் கலந்து கொண்டனர். மாரி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு அமைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மாரி2 படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்க உள்ளது.