கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரான படங்களுக்கான 62-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்ப்படங்கள் 7 விருதுகளைத் தட்டி வந்திருக்கின்றன. அவற்றின் விவரம் வருமாறு:
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகிர்தண்டா’ படம் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘பாபி சிம்ஹா’ பெறுகிறார். இதே படத்தின் சிறந்த படத்தொகுப்புக்காக ‘விவேக் ஹர்ஷன்’ சிறந்த படத் தொகுப்பாளர் விருதைப் பெறுகிறார்.
சிறந்த பின்னணிப் பாடகி – உத்ரா உன்னிகிருஷ்ணன். பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகளான இவருக்கு, விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்தில் ‘அழகே… அழகே…’ பாடலைப் பாடியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இதே பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருது na_muthukumar2014 அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘சினிமா பற்றிய சிறந்த எழுத்து’க்கான விருதை ‘பிரைட் ஆஃப் தமிழ்சினிமா’ (Pride of Tamil Cinema) நூலை எழுதிய தயாரிப்பாளர் ‘தனஞ்செயன் கோவிந்த்’ பெறுகிறார்.
சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ஜே. எஸ். சதீஷ்குமார் தயாரித்து, பிரம்மா இயக்கிய ‘குற்றம் கடிதல்’ படம் வென்றிருக்கிறது.
சிறந்த குழந்தைகள் படத்துக்கான விருதை மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ பெறுகிறது.
தேசிய விருதுகளைத் தட்டிவந்த தமிழ்க் கலைஞர்களை வாழ்த்துகிறோம்..!