
டி சிவாவோடு இணைந்து தயாரிப்பில் இறங்கிய ‘டூ மூவீ பஃஃப்ஸ்’ (2 எம் பி) நிறுவனத்தின் உரிமையாளர் பி. எஸ். ரகுநாதன், தற்போது ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் புதுமுக இயக்குனர் சுதர் தன்னுடைய ‘சர்க்யூட்’ குறும்படம் மூலம் மக்களின் பாராட்டுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. “இதுவரை எவரும் கண்டிராத கதை களத்தை இயக்குனர் சுதர் எங்களிடம் சொன்ன அடுத்த கணமே நாங்கள் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டோம். தற்போது இந்த படத்தின் மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. வருகின்ற 15 ஆம் தேதி இந்த படத்தின் பூஜையானது எளிமையான முறையில் நடைபெறும். வெறும் பணம், புகழ் மட்டுமே சம்பாதிப்பது தயாரிப்பாளர்களின் குணம் கிடையாது. மக்களின் ரசனைகளை நன்கு அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் திரைப்படங்களை வழங்க வேண்டும். ‘இவர்கள் தயாரிப்பில் வெளிவரும் படம்ன்னா நம்பி போகலாம்’ என்று மக்கள் கூறும் கருத்து தான் உண்மையான வெற்றி. என் சிறு வயதில் இருந்தே எனக்கு நல்ல படங்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்து வருகிறது. அதை பிரதிபலிக்கும் வண்ணமாக இந்த திரைப்படம் அமையும்.
தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்து வளர்ந்து வரும் எங்கள் ‘டூ மூவீ பஃஃப்ஸ்’ (2 எம் பி) நிறுவனத்திற்கு கிடைத்த டி சிவா சாரை, எங்களின் பொக்கிஷமாக கருதுகிறோம். ஒரு படம் வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் அதே சமயத்தில் மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கும் படமாக இருக்குமா என்பதை மிக துல்லியமாக கணிக்கும் திறமை படைத்தவர் சிவா சார். ஓவ்வொரு படங்களிலும் அவர் தேர்வு செய்யும் கதையம்சமானது மேலோங்கி நிற்கிறது. அப்படிப்பட்ட திறமைகளை உள்ளடக்கிய டி சிவா சார் எங்கள் ‘டூ மூவீ பஃஃப்ஸ்’ (2 எம் பி) நிறுவனத்தின் வழிகாட்டியாக செயல்பட்டு கொண்டிருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘டூ மூவீ பஃஃப்ஸ்’ (2 எம் பி) நிறுவனத்தின் உரிமையாளர் பி. எஸ். ரகுநாதன்