லிங்கா), அறிமுக நாயகி சாரா ஆச்சர் ,திலீபன்,ராதாரவி ,சாய் தீனா,,,ஷாரா, வையாபுரி,சரத் ரவி, அர்ஜய்,அபிஷேக்.
ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன்.ஒளிப்பதிவு – சரத் வளையாபதி , பிரேண்டன் சுஷாந்த்.
இசை – ராக்கேஷ் அம்பிகாபதி, பாடல்கள் – அருண் பாரதி,
எடிட்டிங் – ஆர்.கே. ஸ்ரீநாத், TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எஸ். உமா மகேஸ்வரி தயாரித்துளார்.
சட்டவிரோத கடத்தல் தொழிலில் பெரிய தாதாவாக இருப்பவர் தாவுத். சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று அங்கே பெரிய தாதாவாக இருக்கும் தாவுத்,தனது ஆட்களைக் கொண்டு சென்னையில் திரை மறைவு கடத்தல் தொழில் செய்து வருகிறார்.அந்தத் தொழிலை சென்னையில் செய்பவர்களுக்கு போட்டியும் பொறாமையும் பகைமையும் உள்ளன.அவரது கடத்தல் பொருள்களை சென்னையில் கைமாற்றி வியாபாரம் செய்பவர் மூர்த்தி, விசாகம். இவர்களுக்குள் நடக்கும் மோதல் ஒருவரை ஒருவர் தவிர்த்து செய்யும் கடத்தல் முயற்சிகள், இவர்களைப் பிடிக்க போலீஸ் வலை விரிக்கும் வியூகம், போலீசில் சிலர் செய்யும் துரோகம் போன்றவற்றை வைத்துப் பின்னப்பட்டதுதான் ‘தாவுத் ‘திரைப்படத்தின் கதை.
லிங்கா தம்பிதுரை பாத்திரத்தில் வருகிறார்.ஒரு அப்பாவி டிரைவராக வந்து பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.அசட்டுத்தனமான சந்தேகங்களை கேட்டுஅப்பாவியாக வரும் அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று சொல்கிற பாத்திரத்தில் வந்து அவர் செய்யும் செயல்கள் சிரிப்பு மூட்டினாலும் பின் பாதியில் பிறகு நிறம் மாறுவது அதிர்ச்சி ரகம்.
டேனி பாத்திரத்தில் வரும் அறிமுக நாயகி சாரா ஆச்சர் விதவிதமான தோற்றங்களில் வருகிறார் அவருக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.
ராதாரவி போலீஸ் கமிஷனர் ஆக வருகிறார் .அவ்வப்போது ரெக்கார்டுகளைப் புரட்டிக் கொண்டிருக்கிறார் . திரையிருப்புக்காக அவரை நடிக்க வைத்துள்ளனர்.விசாகம் பாத்திரத்தில் வரும் அபிஷேக்கும் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.
லிங்காவின் நண்பனாக நடித்துள்ள ஷாரா நெற்றியில் திருநூறு நித்தமும் பூஜை என்று பக்திப்பரவசமாக இருந்து கொண்டு குடிகாரராக செய்யும் அலப்பறைகள் ஜாலி ரகளை.
மூர்த்தியாக வரும் சாய் தீனா வழக்கம் போல வில்லத்தனத்தில் வெறுப்பூட்டுகிறார்.
ஜானி பாத்திரத்தில் வரும் சரத் ரவி யாரைப் பார்த்தாலும் அடிச்சு கடலில் இறக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜய்ஏதேதோ செய்ய வருவார் என்று எதிர்பார்த்தால் பெரிதாக அவருக்குச் சுவாரசியமான காட்சிகள் இல்லை.வையாபுரியும் அப்படித்தான்.
படத்தின் இயக்குநரின் பாதையில் இசையமைப்பாளர் ஒளிப்பதியாளர் இருவரும் இணைந்து பயணம் செய்துள்ளனர்.
ஒரு கிரைம் திரில்லர் படத்தை கொடுக்க வேண்டும் நினைத்து தங்களால் முடிந்த அளவிற்குச் செய்திருக்கிறார்கள்.சின்ன சின்ன நடிகர்களையும் எளிதான பின் புலங்களையும் வைத்து இந்தப் படத்தை முடித்திருக்கிறார்கள்.


