திருட்டு விசிடி விற்றேன் என்றும் இப்போது திரைப்படம் எடுக்கிறேன் என்றும் ஓர் இயக்குநர் தன் பட விழாவில் வெளிப்படையாகப் பேசினார் . இது பற்றிய விவரம் வருமாறு :
கெளரவக் கொலைகள் என்றும் ஆணவக் கொலைகள் என்றும் கூறப்படுகிற சாதியம் சார்ந்த கொலைகளை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘தொட்ரா’ .
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார் . பாண்டியராஜன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் தொட்ரா படத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும் போது , ” நான் எதுவுமே தெரியாமல் சினிமாவுக்கு வந்தேன். இயக்குநர் பாக்யராஜ் சாரிடம் சேர்ந்தேன். முதலில் என்னிடம் கதை எழுதத் தெரியுமா? ஜோக் எழுதத் தெரியுமா? என்றார். எழுதிக் கொடுத்தேன். அதை பாக்யாவில் போட்டார். பிறகு என்னைச் சேர்த்துக் கொண்டார். அவரிடமிருந்து வெளியே வந்து வாய்ப்பு தேடினேன். ஏராளமான உப்புமா கம்பெனிகளிடம் ஏறி இறங்கினேன். வெட்கத்தை விட்டு உண்மையைச் சொல்கிறேன் . ஒரு கட்பத்தில் சினிமா நமக்கு சரிப்பட்டு வராது என்று திருட்டு விசிடி விற்றேன். சில காலம் திருட்டு விசிடி கடை நடத்தினேன் .ஒரு கட்டத்தில் உறுத்தியது நாமே இதைச் செய்யக் கூடாது என்று தோன்றியது. கடையை மூடிவிட்டு மறுபடியும் சினிமாப் பக்கம் வந்தேன். இந்தப் படத்தில் தயாரிப்பாளருடன் பல முறை சண்டை போட்டுள்ளேன். கதாநாயகி வீணாவை அடித்திருக்கிறேன் .இப்போது அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். படப்பிடிப்பில் பலரையும் பாடாய்ப் படுத்தியிருக்கிறேன். ஒளிப்பதிவாளர் .இசையமைப்பாளர் இருவரும் என்னுடன் ஒன்றாக இருந்தவர்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய் எனக் கூறினார்.. இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது.படம் நன்றாக வந்துள்ளது.” இவ்வாறு மதுராஜ் பேசினார்.
விழாவில் பெப்ஸி தலைவர் ஆர்.கே .செல்வமணி , இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ் , பேரரசு , மீரா கதிரவன் , தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு , சுரேஷ் காமாட்சி ,கனியமுதன் , நடிகர்கள் பபத்தின் நாயகன் பிருத்வி பாண்டியராஜன் , ஸ்ரீகாந்த் , பரத், கலையரசன் , போஸ் வெங்கட் ,லொள்ளு சபா ஜீவா , ஹரிஷ் , வீரா , கூல் சுரேஷ் , ஷரன் , நடிகைகள் நமீதா , கோமல் சர்மா , வசுந்தரா காஷ்யப் , கதாநாயகி வீணா , மைனா சூசன் ,இசையமைப்பாளர் ஆர்.என். உத்தமராஜா , எடிட்டர் கோபி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக எம்.எஸ்.குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தயாரிப்பாளர் ஜெய்சந்திரா நன்றி