
இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு இசை கணேசன் சேகர். இவர் தான் G.V.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த “ ப்ருஸ் லீ “ திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான்தான் கொப்பன் டா “ ஒற்றைப் பாடலுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை இயக்குநர் M.ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் ஸ்ரீ இயக்கியுள்ளார். கவிஞர் முத்தமிழ் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் / பாடகர் / நடிகர் என்று பன்முகம் கொண்ட G.V. பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.

அழகிய காதல் பாடலான எனக்கெனவே – வில் நாயகனாக ராகேஷ் ராஜன் , நாயகியாக ஸ்மிருத்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
அனுபவம் வாய்ந்த குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை மெட்ராஸ் டெக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெகதீசன் R.V , நவநீத பாபு , நரேன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் இப்பாடலின் First Look ப்ரோமோ வெளியாகவுள்ளது. இதைதொடர்ந்து முழு பாடலும் வெளியாகும். பாடலை உருவாக்கியுள்ள இதே குழு ஒன்றாக இணை ந்து அடுத்து திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.