நாக் ஸ்டுடியோஸ் சோனி மியூசிக் உடன் இணைந்து ‘தி மெட்ராஸ் கிக்’ என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளது. சுய இசைக்குழுக்களும், சுய இசையமைப்பாளர்களும் ‘மெட்ராஸ் கிக்’ மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். பல புதிய திறமைகளை கண்டறியும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மெட்ராஸ் கிக்’ அமைப்பை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் மதன் கார்க்கி தொடங்கி வைத்தனர். சோனி மியூசிக் அஷோக் பர்வானி உடன் இருந்தார்.
அப்போது பேசிய இசையமைப்பாளர் அனிருத், “ஆனந்த் என்னுடைய கல்லூரி சீனியர். லாஸ் ஏஞ்சலஸ் போனபோது அங்கு நான் பார்த்த ஸ்டுடியோக்கள் தோட்டம், ஓய்வு எடுக்கும் அறைகள், புத்துணர்வளிக்கும் லௌஞ் ஆகியவையோடு அமைந்திருந்தன. ஒரு கலைஞனுக்கு தேவையான அம்சங்கள் அவை. அதே அம்சங்களோடு இந்த ஸ்டுடியோவை அமைத்திருக்கிறார்..இந்த ஸ்டூடியோ நிச்சயமாக மிக மிக நல்ல இடத்தை அடையும்” என்றார்.
விழாவில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, தயாரிப்பாளர்கள் சீனிவாசன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், இயக்குநர் சுந்தர்.சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.