தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வு : ‘சவுத் கனெக்ட் 2025’ பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில்!

தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வான ‘ஃபிக்கி ( FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார், கமல்ஹாசன் பங்கேற்கிறார்

முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள ‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. துவக்க விழாவில் துணை முதல்வருடன் இந்நிகழ்வின் (MEBC) தலைமை வழிகாட்டியும் மூத்த நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

இந்தியாவின் பொழுதுபோக்கு துறை கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இதில் பிராந்திய மொழிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட ‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவுகளின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான ஒரு முக்கிய மேடையாக இந்நிகழ்ச்சி அமையும். இத்துறையில் இந்தியாவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தூண்டுகோலாக இது திகழும்.

இரண்டு நாள் மாநாட்டில் பொழுதுபோக்கு துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த அமர்வுகள், கலந்துரையாடல்கள், பட்டறைகள், சந்திப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இரண்டாம் நாளன்று பிளே நெக்ஸ்ட் (“PlayNext”) என்ற மாநாடு நடைபெறும். கேமிங், மின் விளையாட்டு மற்றும் மாறிவரும் பொழுதுபோக்கு குறித்த ஆழமான அமர்வுகளைக் கொண்ட ஒரு பிரத்யேக நிகழ்வாக இது இருக்கும்.

பொழுதுபோக்கு துறை முன்னணி பிரமுகர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் உள்ளிட்டோர் இந்த இரண்டு நாள் ‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்க மற்றும் மேலும் விவரங்களுக்கு, www.frames.ficci.in/mebc ஐப் பார்வையிடவும்.