உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது.
அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘விக்ரம் ‘ திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் ‘ஓப்பன் சினிமா’ என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும்.