விமல், ஜனா, பூஜிதா ,புகழ்,ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் , லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, வையாபுரி நடித்துள்ளனர். எழில் இயக்கி உள்ளார்ஒளிப்பதிவு ஆர் செல்வா,.. இசை வித்தியாசாகர்.தயாரிப்பு இன்ஃபினிட்டி கிரியேஷன்.
போலீஸ் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள நகைச்சுவைப் படம்.விமல், புகழ் ஆகியோர் வெவ்வேறு ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள்.இருவருக்கும் வழக்குகளைக் கவனித்துப் பிடிப்பதிலும் மாமூல் வாங்குவதிலும் பலத்த போட்டி நிலவுகிறது.இந்த சூழ்நிலையில் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் ஓரிடத்தில் கூடி கூவத்தூர் பாணியில் அமர்க்களம் செய்து ஜாலியாக இருந்த போது எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோ டிஸ்க் காணாமல் போகிறது.மந்திரி ரவிமரியா அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார் போலீஸ் அதிகாரி விமலும் நாயகியான அசிஸ்டன்ட் கமிஷனர் பூஜிதா குழுவினரும் அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். இன்னொரு பக்கம் மார்க்கெட் பாண்டி என்பவன் கொலை செய்யப்பட்டு அவனது தலை காணாமல் போகிறது.இந்த களேபரத்தில் இந்த வழக்கும் சேர்ந்து கொள்கிறது. இந்த இரண்டு வழக்குகளும் தேடலுக்கு நிர்பந்திக்க, இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் படாத பாடுபடுகிறார்கள். தேடலில் அந்த வெட்டப்பட்ட தலை வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்கிறது. முடிவு என்ன என்பதுதான் தேசிங்கு ராஜா 2 படத்தில் கதை.
விமல், ஜனா, பூஜிதா ,புகழ்,ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் , லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, வையாபுரி நடித்துள்ளனர். இன்ஸ்பெக்டராக பெண் வேடமிட்டு வரும் புகழ் படம் முழுக்க அமர்க்களம் செய்கிறார்.போலீஸ் காமெடி என்றதுமே எல்லாரும் நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.பஞ்ச் டயலாக் அளவோடு இருந்தால் தான் ரசிக்கலாம் இதில் ஆளாளுக்குப் பஞ்ச் அடித்து நம் காதை பஞ்சர் ஆக்குகிறார்கள்.
விமல் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் உடன் இருக்கும் நட்சத்திர கூட்டத்தில் மூழ்கி காணாமல் போகிறார்.படம் முழுக்க வந்தாலும்
அவருக்கு நடிப்பதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லை.நாயகி பூஜிதா பாடல்கள் சில காட்சிகள் தவிர்த்து அவ்வப்போது வந்து தலை காட்டுகிறார். அவருக்கும் அழுத்தமான காட்சிகள் இல்லை.இன்ஸ்பெக்டராக பெண் வேடமிட்டு வரும் புகழ் படம் முழுக்க அமர்க்களம் செய்கிறார்.
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு கும்பல் வாய் கிழிய பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு எதிராக போலீஸ்-ம் பேசுகிறார்கள்.பெரும்பாலும் இரு பொருள் வசனங்கள். இப்படி படம் முழுக்கப் பேசுகிறார்கள். பேசித்தான் சிரித்து வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் போலும்.
ஏராளமான நட்சத்திரங்களை வைத்து நடிக்க வைக்காமல் பேசிப்பேசியே சிரிக்க வைக்கிறார்கள். சில காட்சிகளில் கோட்டை விட்டு உள்ளார்கள் .இந்த நகைச்சுவைப் படத்திற்கு ஒளிப் பதிவு செய்துள்ளார் ராஜபாண்டி .வித்தியாசாகரின் இசையில் பெரிய வித்தியாசம் காட்டவில்லை.,லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் பிடிக்கும். மொத்தத்தில் இந்த ‘தேசிங்கு ராஜா 2’ அசட்டுத்தனமான காமெடிகளின் தோரணம்.


