அண்மையில் கடந்த 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ‘றெக்க’, ‘ரெமோ’, ‘தேவி’ என மூன்று படங்கள் வெளிவந்தன. மூன்றில் எது வெற்றி பெற்றது ?பெரிய வசூல் செய்தது என்றால் அது ‘தேவி’ தான் என்கிறது ‘தேவி’ படக்குழு.
இதை முன்னிட்டு ‘ தேவி படத்தின் வெற்றி சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ‘தேவி’ படத் தயாரிப்பாளர் அஸ்வின்,
விநியோகஸ்தர் ஆரா சினிமாஸ் மகேஷ் . நடிகர் பிரபுதேவா, இயக்குநர் விஜய், நடிகர் ஆர்.ஜே . பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆரா சினிமாஸ் மகேஷ் பேசும் போது “தேவி மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தப் படம் தனியாக வந்திருந்தால் பிச்சைக்காரன்,அப்பா மாதிரி பெரிய வெற்றி பெற்றிருக்கும்.
இருந்தாலும் இப்படிப் போட்டியிட்டு ஜெயிச்சது மகிழ்ச்சி.முதல் வாரம் 190 தியேட்டர்களில் வெளியிட்டது மறு வாரம் 75 தியேட்டர்கள் அதிகமாகியுள்ளது ” என்றார்.
நடிகர் ஆர்.ஜே . பாலாஜி பேசும் போது , ” நான் கூட நம்பலை. என்னது றெக்க ரெமோ மத்தியில் தேவி யான்னு நக்கலாசிரிச்சாங்க.
ஆனா தேவி ஜெபிச்சிருக்கு.
12 ஆண்டுகளுக்குப் பிறகு கபாலி மாதிரி ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ன்னு பிரபுதேவா சார் வந்திருக்கார்.
சொந்த வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் சோர்ந்து போயிருந்த நண்பர் இயக்குநர் விஜய்க்கு இந்த வெற்றி முக்கியமானது.
இது சக்சஸ் மீட் அல்ல சந்தோஷ மீட்.”என்றார்.
இயக்குநர் விஜய் பேசும் போது ” இது எனக்கு முக்கியமான தருணம். இது எனக்கு முக்கியமான படம்.”என்றார்.
பிரபுதேவா பேசும் போது ” எனக்கு படம் இயக்குவது என்றால் முழு டென்ஷனும் இருக்கும். நடிக்கும் போது அது அவ்வளவா இருக்காது. குறைவா இருக்கும்.
நடித்து முடித்துவிட்டு, தியேட்டரில் முதல் நாள் படம் பார்க்க நுழையும் போது ஒரே பதற்றமாக இருந்தது. உள்ளே போனதும் கிடைத்த ஆரவாரம்,ஆதரவு. மகிழ்ச்சியைத் தந்தது. இப்படத்தை ஏற்றுக்கொண்டு வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்றார் சுருக்கமாக.