பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத் திரைப்படத்தை ஆர்வியார் இயக்கியுள்ளார். கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம் இது. கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
ஜெரால்டு, ராஜசேகர்,அமர்,நசீர்,சித்தார்த், உமாஸ்ரீ ,மேக்னா இவர்களுடன் சிங்கம்புலி,முத்துக்காளை,உமா,கசாலி,ஷர்மிளா ,காளையப்பன், சிவநாராயணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பு – எவர்கிரின் எஸ். சண்முகம், இயக்கம் – ஆர்வியார், இசை – சாகித்யா.ஆர், ஒளிப்பதிவு – நந்து.
அஞ்சுக்கு ஒண்ணு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடை பெற்றது.இதில் தயாரிப்பாளர் எவர்கிரீன்.எஸ்.சண்முகம், இயக்குநர் ஆர்வியார்,இசையமைப்பாளர் சாகித்யா உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்,நடிகைகளும் கலந்துகொண்டனர்.
எனக்கு இயக்குநர் சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடியே படத்தை முடித்து கொடுத்துள்ளார்.இந்த படம் நன்றாக வந்துள்ளது,பாடல்கள் அனைத்தும் சிறப்பாகவுள்ளது அதேபோல் படமும் சிறப்பாக வந்துள்ளது என் போன்ற புதுமுக தயாரிப்பாளருக்கு ஊடக நண்பர்களின் ஆதரவு வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய அனைத்து 5 கதையின் நாயகர்களும் ”இயக்குநர் எங்களை 45 நாள் குளிக்க விடாமலும்,முக அலங்காரம் செய்ய விடாமலும் செய்து எங்களை கட்டிட தொழிலாளர்களாகவே மாற்றிவிட்டார் என்றனர்.நாங்கள் ஒரு இராணுவத்தில் பணியாற்றியதைபோல் பணிபுரிந்ததாகவும் இந்த படத்தின் அனுபவம் எப்போதும் எங்களால் மறக்க முடியாது” என்றனர்.
கடைசியாக பேசிய இயக்குநர் ஆர்வியார் .
‘யநான் தயாரிப்பாளருக்கு சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடி படம் முடித்து கொடுத்துள்ளேன் அதனால் தான் அவர் எனக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்துள்ளார். அந்த படத்தின் தலைப்பு ‘அழுக்கு’ என்று பெயர் வைத்துள்ளேன்” என்றார்.