நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் தொடக்க விழா !

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் தொடக்க விழா பட பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது

விழாவில் கழுகு படத்தின் இயக்குநர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் தொடங்கியிருக்கிறார்கள்.வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார்

கிராமத்துக்கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சஸ்பென்ஸ் ,மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா. 

விழாவில் இயக்குநர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் cs,
கலை இயக்குநர் பாப்பா நாடு C . உதயகுமார். , எடிட்டர் வெற்றிகிருஷ்ணன், மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வழக்கமாக சமஸ்கிருத மந்திரங்கள் ஓத நடக்கும் பூஜையில் இன்று தமிழில் ‘நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’ என்று திருவாசகத்தின் சிவபுராணம் பாடி அர்ச்சனை செய்து வழிபாடு செய்யப்பட்டது காதுகளுக்கு இனிமையாக இருந்தது.