நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் : நடிகர் சங்கம் வாழ்த்து!

கமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து!

தென்னிந்திய நடிகர் சங்க மூத்த உறுப்பினரும், நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவருமான உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர்.கமல்ஹாசன் அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்.பிரேம், நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதாகுமாரி , டையானா விசாலினி ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந்தார்.