
ஸ்ரீனிவாசனின் மா பெரும் வெற்றி பெற்று இன்று வரை கொண்டாடப்படும் படமான ‘வடக்குநோக்கி யந்த்ரம்’ படத்தை இந்த தலைமுறைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து இயக்க உள்ளார் தியன் ஸ்ரீனிவாசன். இப்படத்திற்கு ‘லவ்,ஆக்ஷன், ரொமான்ஸ் ‘ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும் , அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

வடக்குநோக்கியந்த்ரத்தின் சாரத்தை மட்டுமே எடுத்து, சில மாற்றங்கள் செய்து அதை இந்த தலைமுறைக்கேற்ப தர உள்ளேன். நிவினும் நயன்தாராவும் இப்படத்தின் தூண்கள் .இந்த காதல் – காமெடி படத்தில் அஜூ வர்கஹீஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம் . இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் . விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்யவுள்ளார். இது எனக்கு முதல் படமாக இருந்தாலும், நயன்தாராவை தவிர இப்படத்தில் பணியாற்ற உள்ள எல்லா நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளதால் , எந்த விதமான பதற்றமில்லாமல் என்னால் செயல்படமுடியும் ”என்கிறார். .