
11-வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது “மிக மிக அவசரம்” படம்.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா நடிப்பில் வெளிவந்த படம் மிக மிக அவசரம்.
தமிழில் இருந்து பல படங்கள் நாமினேட் ஆகியிருந்த நிலையில் மிக மிக அவசரம் படத்திற்கான பாலுமகேந்திரா விருதினையும், சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ஸ்ரீ ப்ரியங்காவும் பெறுகிறார்கள் என அறிவித்தது.
வரிசையாக பல விருதுகளைக் குவித்து வரும் மிக மிக அவசரம் படத்திற்கு இரண்டு விருதுகளை நோர்வே தமிழ்த் திரைப்பட விழாக் குழு அறிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது எனக் குறிப்பிட்டார் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி.