நடிகர் பிரபுதேவா நடித்திருக்கும் ‘பகீரா’ திரைப்படம் உலகம் முழுவது நாளை வெளியாக இருக்கிறது. படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள எதிர்பார்ப்பு படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் புதிய எண்டர்டெயினர் படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “’பகீரா’ ரசிகர்களைக் கவரும் அம்சங்களுடன் ஒரு அசத்தல் பொழுதுபோக்கு படமாக இருக்கும். ஆரம்பத்தில், நான் ஸ்கிரிப்ட் எழுதும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு என் மனதில் பிரபுதேவா மாஸ்டர்தான் தொடர்ந்து பயணித்தார். கதை எழுதி முடிந்ததும், தயாரிப்பாளர் பரதன் சாரிடம் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற என் ஆசையை தெரிவித்தேன். மேலும், இந்த கதாபாத்திரத்தை திரையில் உயிர்ப்பிக்க மாஸ்டர் பொருத்தமானவராக இருப்பார் என தயாரிப்பாளரும் உணர்ந்தார். இப்போது படத்தின் பணிகளை முடித்து இறுதியாக பார்க்கும்போது, அவர் எங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி இருக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.


இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் பரதன் சாருக்கு நன்றி. அவருடைய ஆதரவு இல்லாவிட்டால், இந்த திரைப்படம் அர்த்தமற்றதாக இருந்திருக்கும். அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் போன்ற நம்பிக்கைக்குரிய நடிகைகளுடன் இணைந்து பணியாற்றியதும் மகிழ்ச்சி. அவர்கள் இந்த படத்தின் சிற்பிகள் என சொல்வேன். அவர்களின் திரை இருப்பு மற்றும் நடிப்பு படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியது. பகீரா ஒரு அவுட் அண்ட் அவுட் என்டர்டெய்னராக இருக்கும். இந்த எனர்ஜி நிச்சயம் பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தும்” என்றார்.