மேடை நாடகங்களில் பபூன் என்கிற பாத்திரத்தை நகைச்சு வைக்காகவும் கருத்துக்கள் சொல்வதற்காகவும் பயன்படுத்துவார்கள்.இந்த பபூன் படம் கிச்சு கிச்சு மூட்டுகிறதா கருத்தைச் சொல்கிறதா என்று பார்க்கலாம்.
அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் பிரதான வேடமற்று உருவாகியுள்ள படம் தான் இந்த ‘பபூன்’
இதில் வைபவ்வுக்கு ஜோடியாக ‘நட்பே துணை’ நாயகி அனகா நடித்துள்ளார்.மேலும், ஜோஜு ஜார்ஜ், ஆந்தகுடி இளையராஜா, நரேன், மூணார் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். .
சரி இதன் கதை என்ன?
காரைக்குடியில் நாடகம் போட்டுப் பிழைப்பு நடத்தி வருகிறார் வைபவ்.காலமாற்றத்தால் நாடகத்திற்குப் பிரகாசமான எதிர்காலம் இல்லையென தெரிகிறது.இனி பிழைப்பு நடத்த முடியாது என முடிவு எடுத்து, வெளிநாடு போக முடிவெடுக்கிருகிறார்கள். அதற்கு பணம் வேண்டுமே.ஏதாவது செய்ய வேண்டுமென்று தகாத வழிக்குச் செல்கிறார்கள்.நண்பனுடன் வைபவ் போதைப்பொருள் கடத்தல் மன்னன் தனபாலன் கீழ் வேலைக்குச் சேர்கிறார்.
அவர்களது முதல் சவாலாகச் சோதனை செய்ய , உப்புக்குப் பதிலாக, போதைப்பொருளை வைத்து அனுப்புகிறது கடத்தல் கும்பல்.
இதனை மோப்பம் பிடிக்கும் போலீஸ் அந்த லாரியை மடக்கிப்பிடித்து இருவரையும் சிறைக்குக் கொண்டு செல்லும் போது இருவரும் செல்லும் வழியிலேயே தப்பிக்கிறார்கள்.
தப்பித்தவர்கள் என்னானார்கள் ? இடையில் பூக்கும் காதல் என்னானது என்பதே பபூன் படத்தின் கதை.
காரைக்குடி வாழ் குமரனாக வைபவ். தனக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைக்குள் சிக்கி, அதிலிருந்து வெளியேற போராடும் இளைஞனின் உருவாக திரையில் தோன்றுகிறார்.
பாடகரான ஆத்தங்குடி இளையராஜாவுக்கு இது முதல் படம். நல்வருகை .
முதல் பாதியில் கண்டுகொள்ளப்படாத நாடக கலைஞர்களின் வாழ்க்கையையும், அதையொட்டிய சிக்கல்களை கையிலெடுத்து, இலங்கை அகதிகள் குறித்த பதிவு, புலம்பெயர் தமிழர்களின் நிலைகள் குறித்து பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் அசோக் வீரப்பன்.
இராண்டாம் பாதியில் பிரச்சனைகளின் காரணங்களையும் அதன் பின்னே உள்ள அரசியலையும் தெளிவாகச் சொல்லி இருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் இராமேஸ்வரத்தின காலை, மாலையை அழகாககாட்சிப்படுத்திருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசை படத்தின் பெரும் பலம்.
த்ரில்லராக படம் நன்றாக இருந்தாலும் படத்தில் சொல்ல வேண்டிய கருத்தைச் சரியாகக் கொண்டுபோய் சேர்த்திருக்கலாம்.