டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடிப்பில் பரவசமூட்டும் திகில் திரைப்படம் ‘ஜின்’ கலகலப்பு டீசர் வெளியீடு
‘அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஜின் கதாப்பத்திரம் ஆறு முதல் அறுபது வரை அனைவரையும் கவரும்
Teaser:
4.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து இணையத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒத்த தாமரை’ பாடலை இயக்கிய டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் கலந்த திரைப்படம் ‘ஜின் தி பெட்’. இதன் டீசர் தற்போது வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ‘ஜின்’ திரைப்படத்தில் ‘பிக் பாஸ்’ வெற்றியாளர் முகேன் ராவ் மற்றும் ‘ஜோ’ திரைப்பட புகழ் பாவ்யா திரிகா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். தியா மூவிஸ் இப்படத்தின் வர்த்தக பங்குதாரர் ஆவார்.
பால சரவணன், டத்தோ ராதாரவி, இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, விநோதினி, ஜார்ஜ் விஜய் மற்றும் ரித்விக் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். நவீன தொழில்நுட்பத்துடன் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ஜின் எனும் கதாபாத்திரம் இப்படத்தில் முக்கிய இடம் பெறுகிறது.
சென்னை, ஹைதரபாத், கொச்சி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்களின் எட்டு மாத உழைப்பில் உருவான ‘ஜின்’ பாத்திரம் சுமார் 40 நிமிடங்கள் படத்தில் இடம் பெறுகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது கவரும்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் டி ஆர் பாலா, “திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்த திரைப்படமாக ‘ஜின்’ உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாக கொண்டு கதை நடக்கிறது. ஜின் பாத்திரம் அனைவரையும் கவரும்,” என்று தெரிவித்தார்.
முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றும் ராதாரவி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் உடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்று இயக்குநர் டி ஆர் பாலா குறிப்பிட்டார்.
‘ஜின்’ திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க, அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் படத்தொகுப்பை கையள, கலை இயக்கத்திற்கு வி எஸ் தினேஷ் குமாரும், பாடல் வரிகளுக்கு விவேகா, கு கார்த்திக் மற்றும் விஷ்ணு எடவனும், சண்டைக்காட்சிகளுக்கு பேன்தோம் பிரதீப்பும் பொறுப்பேற்றுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டிமா பாடல் இணையத்தில் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ஜின்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
திரைக்கதை ஆலோசனை: கருந்தேள் ராஜேஷ்; நடனம்: கலைமாமணி ஸ்ரீதர், அக்ஷதா ஸ்ரீதர்; உடைகள் வடிவமைப்பு: தீப்தி ஆர் ஜே; ஒலி வடிவமைப்பு & ஒலி கலவை: டி உதயகுமார்; கலரிஸ்ட்: ஷண்முக பாண்டியன் எம்; வி எஃப் எக்ஸ்: எஃபெக்ட்ஸ் & லாஜிக்ஸ்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ஃபாக்ஸ் ஐ.
டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடிப்பில் பல்வேறு உணர்வுகளை கடத்தும் காதல் கதை ‘ஜின்’ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.