
ஆன்லைன் பாட்டுப்போட்டியான ஸ்ருதி சீசன்-2 நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
ஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டுப் போட்டியாகும். இது முழுக்க முழுக்க முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடத்தப்படும். தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சி உருவாக்கி வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடத்திவருகின்றனர்.
ஸ்ருதி சீசன்-2
முதல் சீசன் கடந்த ஆண்டு நடந்தது. 60 நாள்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 283 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இசையமைப்பாளர் தீனா, பாடகர் அனந்து, கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
Sruthi Season 2
இந்த நிலையில் போட்டியின் இரண்டாம் சீசன் நேற்று தொடங்கியது. இந்நிகழ்வை இசையமைப்பாளர் தேவா, பின்னணி பாடகி சுஜாதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 60 நாள்கள் நடக்கவிருக்கும் இப்போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு :
www.singinsruti.com | www.facebook.com/singinsruti
Ph : 9841071971 | E-mail : sruticontest@gmail.com
Sruti” Season 2 ஆன்லைன் பாடல் போட்டி தொடக்க விழா புகைப்படங்கள்!


