பிஆர்ஓ யூனியன் தேர்தல் தலைவராக டைமண்ட் பாபு, செயலாளராக. ஏ.ஜான்,பொருளாளராக விஜயமுரளி தேர்வு!
தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான சங்கங்களில் ஒன்றான தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் யூனியனுக்கு நடந்த தேர்தலில் ஆறாவது முறையாக தலைவரானார் டைமண்ட் பாபு.
பொதுச் செயலாளராக முதல் முறையாக வென்று பதவியில் அமர்ந்துள்ளார்
ஏ. ஜான்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் இது. 64 உறுப்பினர்கள் கொண்ட பிஆர்ஓ யூனியனில் 59 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள்.
பொதுவாக சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும். முக்கிய பதவிகளுக்கு தேர்தல் இல்லாமல் போட்டியின்றி தங்களுக்குள் ஒருவரைத் தேர்வு செய்துவந்தனர்.
ஆனால் இந்த முறை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்பட 16 பொறுப்புகளுக்கும் தேர்தல் நடந்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முழுமையான தேர்தல் என்பதால் போட்டியும் பரபரப்பும் பலமாகவே இருந்தது.
கடந்த நான்காண்டுகளாக விஜயமுரளி தலைவராகவும், பெரு துளசி பழனிவேல் செயலாளராகவும், மௌனம் ரவி பொருளாளராகவும் பதவி வகித்தனர்.
இந்த முறை தேர்தலில் போட்டியிட்டவர்கள்:
தலைவர் (1) – ஆதம்பாக்கம் ராமதாஸ், டைமண்ட் பாபு, நெல்லை சுந்தரராஜன்
துணைத் தலைவர்கள் (2) – வீகே சுந்தர், பிடி செல்வகுமார், கோவிந்தராஜ், கணேஷ் குமார்
செயலாளர் (1) -ஏ.. ஜான், பெரு துளசி பழனிவேல்
பொருளாளர் (1) – சுரேஷ் சந்திரா, விஜயமுரளி
இணைச் செயலாளர்கள் (2) – யுவராஜ், ராமானுஜம், வெங்கட், நிகில் முருகன்
இவர்களைத் தவிர 9 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 13 பேர் போட்டியிட்டனர்.
நேற்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 57 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இருவர் மட்டும் வாக்களிக்க வரவில்லை.
2.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன.
முடிவில் டைமண்ட் பாபு 39 வாக்குகளுடன் தலைவராக அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற நெல்லை சுந்தரராஜன், ஆதம்பாக்கம் ராமதாஸ் ஆகியோர் தலா 9 வாக்குகள் மட்டுமே பெற்றனர்.
பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஏ. ஜான் 37 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரு துளசி பழனிவேல் 20 வாக்குகள் பெற்றார்.
பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஜயமுரளி 35 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுரேஷ் சந்திரா 22 வாக்குகள் பெற்றார்.
மற்ற பதவிகளுக்குப் போட்டியிட்டு வென்றவர்கள்:
துணைத் தலைவர்கள் : வீகே சுந்தர் (31), பிடி செல்வகுமார் (32)
இணைச் செயலாளர்கள்: நிகில் முருகன் (33), யுவராஜ் (32)
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்வானவர்கள்:
அந்தணன் ,ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, மேஜர்தாசன்,சக்திவேல்,சரவணன், வெட்டுவானம் சிவகுமார், ரேகா ஆகியோர் .
இந்தத் தேர்தலை வழக்கறிஞர் சங்கர் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்திக் கொடுத்தார். உதவி தேர்தல் அதிகாரிகளாக கண்ணதாசன், பாரிவள்ளல் மற்றும் விபி மணி ஆகியோர் செயல்பட்டனர்.