அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் ராஜ்யம்.
பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.
களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னி ஆனஓவியா ‘போலீஸ் ராஜ்யம் ‘படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
இயற்கை வளம் கொஞ்சும் கிராமத்தில் அப்பா அம்மா குழந்தைகள் என மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் தொடர்ந்து கொலைகள் நிகழ்கிறது.
ஏன் இந்த கொலை குடும்பத்தில் மட்டுமல்ல அந்த ஊரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன.
உள்ளூர் காவல் துறையால் துப்புத் துலக்க முடியாமல் தடுமாற தொடர் கொலைகள் நிகழ காரணம் என்ன
குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக பிருத்விராஜ் அரசால் நியமிக்கப்படுகிறார்.
தொடர் கொலைக்கான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டுபிடித்து கொலைகாரனை பிருத்விராஜ் கைது செய்து விசாரணை செய்கிற போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகிறது.
இது தான் போலீஸ் ராஜ்யம் திரைக்கதை.
தன் மனைவியின் கௌரவம் காக்க செய்யாத கொலையை தான் செய்ததாக கிரண் கணவர் பாபுராஜா காவல்துறையிடம் சரண் அடைகிறார். அவர் அக்கொலையை செய்ய வில்லை என்பதை பிருத்திவிராஜ் கண்டுபிடிக்கிறார்.
தான் குற்றவாளி இல்லை என நிரூபிக்கப்பட்டால் தனது மனைவி களங்கமானவள் என இச்சமூகம் புழுதிவாரித் தூற்றும் எனவே தன்னை குற்றவாளி என அறிவிக்க மன்றாடுகிறார் பாபுராஜா ,
காவல்துறை நினைத்தால் குற்றவாளியை நிரபராதியாக்க முடியும் நிரபராதியை குற்றவாளியாக்க முடியும் என்பதை நிரபராதியான கிரண் கணவர் பாபுராஜாவை அவரது குடும்ப கெளரவம் காக்க கொலைகாரனாக நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் பிருத்விராஜ்.
அத தர்மமான செயலாக இருந்தாலும் ஒரு குடும்ப தலைவியின் களங்கம் போக்க இந்த தவறை செய்யும் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்து இருக்கிறார்.
பொய்யான கொலைக் குற்றவாளியாக இப்படத்தின் இயக்குநர் பாபுராஜா நடித்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்த ஓவியா போலீஸ் ராஜ்யத்தில் ரசிகர்களை கலங்கடிக்கும் கிளாமர் நாயகியாக நடித்திருக்கிறார்.
பிக் பாஸ் பரபரப்புக்கு பின் ஓவியா நாயகியாக நடித்து வெளிவரும் படம் என்பதால் தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் போலீஸ் ராஜ்யம் ரீலீசாகிறது
ஓவியாவின்ம லேசிய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு பிரிமியர் ஷோவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஓவியா கலந்து கொள்ள இருக்கிறார்
தமிழ், மலையாளம், இந்தி என மும்மொழிகளில் தயாராகியுள்ள போலீஸ் ராஜ்யம் செப்டம்பர் 22 அன்று தமிழகத்தில் ரீலீஸ் செய்யப்படுகிறது
தொழில்நுட்ப கலைஞர்கள் : பாடல்கள்: சீமா, சேஷலின், கலை: விஷ்ணு, நடனம்: கூல் ஜெயந்த் வசனம்: கோபால் ராம் எடிட்டிங் : டான் மேக்ஸ் இசை: அன்வர் கதை, திரைக்கதை, இயக்கம்: பாபுராஜ்.