தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷாலின் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார்சோதனை இட்டு அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வீடியோ பைரசி sup. Of Police ஜெயலக்ஷ்மி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் இருந்து
இந்த கும்பலை போலீசார் பிடித்தனர் அத்துடன் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ளகணினி
இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள குறும் தகடுகளையும்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியன் எலெக்ட்ரிகல்ஸ் என்னும் கடைக்கு மேலே ராம்சந்த லால் சேட்டு என்பவருடைய குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கே இருந்து தர்மபுரி , சேலம் , கரூர் , ஈரோடு உள்ளிட்ட பத்து மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் தலைமையில் பொதுசெயலாளர் விஷாலின் புகாரின் அடிப்படையில் அங்குள்ள திருட்டு டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. Sup. Of Police ஜெய லக்ஷ்மி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் sup.of police Chennai நீதி ராஜன் அவர்களின் முன்னிலையில் திருட்டு டி.வி.டி கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.