இன்று திரு. பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டு விட்டது.
இன்று சென்னையில் நாங்கள் இருவரும் அதற்கான அதிகாரபூர்வ படிவங்களில் நாங்கள் இருவரும் கையெழுத்திட்டுவிட்டோம். விவாகரத்திற்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது.
சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் – சுசேன், திலீப் – மஞ்சு, விஜய் – அமலா பால் ஆகியோ விவகாரத்திற்க்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன்.
அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்ததையே அளித்திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர். ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. சென்னை உயர்நீதி மன்றம் தலையிட்ட வரை என்னை கடுமையாக காடுமிராண்டித்தனத்துடனேயே என்னை அணுகினர். எங்கள் விவாகரத்தே நான் எங்கள் வாழ்க்கை எப்படியொரு அருவருக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறைசாற்றியிருக்கும்.
