திரையுலகம் சார்ந்த அகில இந்திய கூட்டமைப்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா’ (மும்பை) அமைப்பின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ‘வின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தலில் தலைவராக திரு டி.பி.அகர்வால் அவர்களும்,செயலாளராக திரு. ரவி கொட்டாரக்கரா அவர்களும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.துணைத்தலைவராக தமிழ்த் தயாரிப்பாளர் திரு.டி.சிவாவும் போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஒருவர் பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியாவி ல் பங்கேற்கும் வகையில் தயாரிப்பாளர் டி.சிவா இப்பொறுப்புக்குப் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இவர் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.
இவை மட்டுமல்ல பிலிம் சேம்பர் என அழைக்கப்படும் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’க்கு 2011-
2012-ல் துணைத்தலைவராகவும் 2013-2014 -ல் செயலாளராகவும் பொறுப்புகளை வகித்தவர்.இப்போதும் பிலிம் சேம்பர் செயலாளராக பொறுப்பில் உள்ளார் .
இவர் ஏற்கெனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 2011-2013-ல் துணைத்தலைவராகவும்,2013-2014-ல் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர். இப்போது 2015- 16ல் செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..