ஹரி இயக்கிய ‘சேவல்’ வெற்றிப் படத்தைத் தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ‘ரீங்காரம்’
இப்படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர்,மூர்த்தி , ‘அரசு’சுரேஷ், சி.ஜே.பாஸ்கர் எனப் பல இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.
ஒளிப்பதிவு- இனியன்ஹரிஸ், இசை–அலிமிர்ஷா. இவர் ,’ஆதார்’ ,சமுத்திரக்கனி நடிக்கும் ‘புத்தனின்சிரிப்பு’ படங்களின் இசையமைப்பாளர்.
இது வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக்களமாக வைத்துப் படம் உருவாகியிருக்கிறது.
படம்பற்றிஇயக்குநர் மேலும் கூறும்போது —
“மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டுமொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் . ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை.
இந்த இரண்டுவிதமான உணர்வுகளையும் சரிவரபயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதை ஓர்அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனாலும் இதை புதுசு என்று சொல்லமாட்டேன்.” என்கிறார்.
கதைபற்றி அவர் கூறும்போது இது புதியகதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் கோணங்களில் வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பதாக கூறும் அவர்,
”எல்லாச் சொற்களும் சொல்லப்பட்டு விட்டன. சொல்கிற வாய்கள் வேறுவேறு என்பார்கள். இந்த உலகத்தில் புதுசு என்று ஒன்றும் கிடையாது. அதற்கான மூலம் என்றைக்கோ உருவாகியிருக்கும். அதுமட்டுமல்ல இந்த மறதி என்று ஒன்று இருக்கும் வரை எல்லாமே புதிதாகத் தெரியும் என்று நினைப்பவன் நான். கோணங்களை வித்தியாசப்படுத்திக் கதை சொல்லி யிருக்கிறேன். கதை புதிதாகத் தோன்றாவிட்டாலும் என்கோணம் புதிது.பார்வை புதிது .அது நிச்சயம் ரசிக்கவைக்கும்..உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பற்றி மட்டுமே பேசும் யதார்த்தமான படம்தான் ‘ரீங்காரம்’ “என்கிறார்.
படத்தில் நடித்த நடிகர்கள்ப ற்றிக் கேட்டபோது…
“ஒவ்வொருவரும் இயல்புமீறாமல் யதார்த்தம் கெடாமல் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனாக புதுமுகம் பாலா. அவர் வேலையைச் சரியாக செய்து யதார்த்தத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
தூக்கமுடியாத பாத்திரத்தைக் கூட தூக்கிக்கொண்டு நடந்திடலாம் ஆனால் கனமான கதாபாத்திரத்தை தூக்கிக்கொண்டு நடப்பது சுலபமல்ல. பாரத்தை முகத்தில் காட்டாமல் பாத்திரத்தை சுமந்து வாழ்ந்திருக்கிறார் கதாநாயகி’ பிரியங்கா. ‘கங்காரு’ பிரியங்காவானஅவர் ,இப்படத்துக்குப்பின் இனி ‘ரீங்காரம் ‘பிரியங்கா ஆகிவிடுவார்.
எப்போதுமே எரியும் நெருப்பாக கலாபவன்மணி .அடக்கமாக நடித்துஆளுமை காட்டிஅசத்தியுள்ளார். குத்திக் கிழிக்கிற கத்திமாதிரி ‘ஆடுகளம்.’ ஜெயபாலன். ‘பசங்க’ சிந்தியா அம்மாவாக உயிர் கொடுத்துள்ளார்.
இதுவரை 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பில்இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்கள் என்றும் புதுமையை ரசிப்பவர்கள். ரீங்காரத்தையும் வரவேற்பார்கள்..”என்கிறார் .