
ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவைச் சமீபத்தில் நடத்தினர். சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் BOFTA திரைப்படக் கல்லூரி இணைந்து வழங்கும் இந்த விழா, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு கொண்டிருக்கும், ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும் – இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா தலைமை தாங்கி நடத்தினார்.
இந்த வருடம், ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருதை பெற்றவர், கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் – 106 வயதான ‘சாலுமரட திம்மக்கா’ ஆவார்.
1. மீனாக்ஷி அம்மாள் – கேரளா – இந்தியாவின் மூத்த ‘களரிபயட்டு’ பெண் கலைஞர்
2. சாந்தி சௌந்தராஜன் – தமிழ்நாடு – ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண்மணி
3. நயன்தாரா – தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகி
4. சி வி திலகவதி – சென்னை – தென்னக ரயில்வேயில் முதல் பெண் ஓட்டுநர்
5. டி கே அனுராதா – பெங்களூர் – ISRO – முதல் பெண் இயக்குநர்
6. சுவேதா சுரேஷ் – சென்னை – சர்வதேச விசில் சாம்பியன்
7. நவநீதம் – திருவள்ளூர் – விவசாயி
8. வாஹித்தா ஷாஜஹான் – புதுச்சேரி – ஆட்டோமொபைல் நிபுணர்
9. விஜயஸ்ரீ – சென்னை – சமூக ஆர்வலர்
10. பாலம் சில்க்ஸ் ஜெயஸ்ரீ ரவி – சென்னை
பார்வையற்றவர்களுக்கான சிறப்பு அங்கீகாரத்தை பெற்றவர்: பாடகி மற்றும் இசை கருவி வாசிக்கும் ஜோதி – சென்னை.
இசையமைப்பாளர் – நடிகர் ஜி வி பிரகாஷ் குமார், இசையமைப்பாளரும், ரெயின் டிராப்ஸ் நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக இருக்கும் ஏ.ஆர்.ரெஹானா, சத்யபாமா பல்கலை கழகத்தின் இயக்குநர் டாக்டர் மரியசீனா ஜான்சன், இசையமைப்பாளர் பவதாரணி, வி ஜி பி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் வி. ஜி. சந்தோஷம், ‘எக்ஸ்னோரா’ நிறுவனத்தின் நிறுவனர் எம் பி நிர்மல், கரிம விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், பத்ம ஸ்ரீ டாக்டர் டி வி தேவராஜன், BOFTA திரைப்பட கல்லூரியின் நிறுவனர் தனஞ்ஜயன், பாடலாசிரியர் உமா தேவி, ஆசிய கண்டத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி, பத்திரிகையாளர் ஹரிஹரன், நாச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் சி கே குமரவேல் மற்றும் வீனா குமரவேல் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டுச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடம் இந்த கௌரவ விருதுகளை பெற்ற சிலர்:
1. மிசைல் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்
2. பூஜா தாகூர் – (first woman to led the guard of honour to US President)
3. சுதா ரகுநாதன் – கர்நாடக பாடகர்
4. வசந்தகுமாரி – ஆசிய கண்டத்தின் முதல் பெண் ஓட்டுநர்
5. ரூபா தேவி – FIFA போட்டியின் முதல் பெண் நடுவர்
5. லக்ஷ்மி – ACID ATTACK SURVIVOR