வாளின்முனையை விட பேனாமுனை வலிமையானது என்றான் மாவீரன் நெப்போலியன். பேனா முனையும் வாள்முனையும் இணைந்தால் அதன் சக்தி எப்படி இருக்கும் என்பதை சொல்லும் படம்தான் ‘பேனா கத்தி’.”பேனாவும் கத்தியும் இணைந்துள்ள படம். பேனாவாக கதாநாயகி அதாவது பத்திரிகை நிருபர். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் நாயகன்.கத்தியாக வீரம் காட்டும் கதாநாயகன். இவர்கள் இருவரும் இணைந்து சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை க் கண்டுபிடித்து களையெடுக்கிறார்கள். நாகரிகம் என்கிற பெயரில் சமூகத்தைச் சீரழிக்கும் நாசகாரக் கும்பலை வேரறுக்க இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள்.
‘பேனாகத்தி’ பெண்கனை கொடுமைப் படுத்துவோருக்கு சரியான மரண அடியாக இருக்கும்.”இப்படியெல்லாம் கூறும் இயக்குநர் எஸ்.ஆர்.பரமகுரு மகேந்திரன் உள்பட பலரிடம் பணியாற்றியவர். இது இவருக்கு முதல்படம்.
நாயகனாக யூடி எஸ் ரமேஷ், நாயகியாக ஜெயரஞ்சனி நடிக்கிறார்கள். இப்படத்தின் தொடக்க விழா இன்று நடந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. எட்டு சண்டைகள் உண்டு.கும்பகோணம். தஞ்சாவூர், மரக்காணம், பாண்டி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.
ஒளிப்பதிவு– கார்த்திக் ராஜா, இசை– சிவரூபன் ,ஸ்டண்ட் நைப் நரேன், எடிட்டிங்– வி.டி விஜயன். பி.எம். பிலிம் பேக்டரி சார்பில் எம். கே நாதன் தயாரிக்கிறார்.
Deprecated: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in /home1/tnsfclub/public_html/tamilcinemareporter/wp-content/plugins/itro-popup/functions/core-function.php on line 146