
டுபாக்கூர் அசிஸ் டெண்டுகளால் தனக்கு பேய்களிடமிருந்து பாதுகாப்பில்லை என உணர்ந்து பயம் ஒரு பொருட்டில்லாத அநாதை இளைஞனை ( ஜீவரத்தினம்) தன்னிடம் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். நாயகி ஈஷான்யாவுக்கு சராசரி நாயகி வேடம்.. ப்ச் ! ஆனாலும் நாலைந்து பேய்களிடம் சிக்குகிறது =தம்பி ராமய்யா குழு .நாலைந்து பேய்களின் உச்ச அட்டகாசம் நாயகனையும் தம்பி ராமய்யா= வையும் நிம்மதியாக வாழ விட்டதா அல்லது அழித்து விடுகிறதா ? என்பது முற்போக்கான க்ளைமாகஸ். ஆஹா எத்தனை அழகுவுக்குப் பின் 2- வது படமாக இப்படம் இயக்கியிருக்கிறார் கண்மணி .பேய்கள் நம்மை பயமுறுத்தி அழிப்பவை அல்ல நம் முன்னோர்களின் ஆன்மா என்கிற பாசிடிவ் தாட்டை வலியுறுத்தி வந்திருக்கும் கதை. இப்படம் பப்படம் ஆகாமல் நியாயமான செண்டிமெண்ட் காட்சிகளால் நிமிர்ந்து நிற்கிறது. பேய்களாக அலையும் தாய் தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அன்பில் லயிப்பதற்காக சென்று வரலாம் ஒரு முறை !