ஷான் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
நாடு முழுமைக்கும், மார்ச் 10, 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பொம்மை நாயகி திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை இன்று அறிவித்தது. பொம்மை நாயகி திரைப்படம் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவு மற்றும் அரசியலும் சமூகமும் அவர்களின் வாழ்க்கை முறையில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பற்றிய கதையாக இருக்கும். இப்படத்தில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை, சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். IMDb 9.5 மதிப்பீடு கொண்ட இத் திரைப்படத்தை, பார்வையாளர்கள் ZEE5-இல் இன்று முதல் ஸ்ட்ரீம் செய்யலாம்.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இத்திரப்படத்தில் ஜி.எம்.குமார், அருள்தாஸ் மற்றும் லிசி ஆண்டனி ஆகியோரும் நடித்துள்ளனர். கடலூரில் உள்ள ஒரு டீக்கடையில் பணிபுரியும் குடும்பஸ்தரான வேலு [யோகி பாபு] எனும் மிகவும் எளிமையான மற்றும் அப்பாவியான நபர் மற்றும் அவரது சிறிய குடும்பத்தைச் சுற்றி கதைத்தளம் இயங்குகிறது. சொந்தமாக ஒரு டீக்கடை அமைக்க விரும்பும் அவரது கனவு நனவாக மாறும் வாய்ப்பை நெருங்கும் சமயத்தில் நிகழும் ஒரு கொடூரமான சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றிய அமைக்கிறது. ஒரு பண்டிகை காலத்தின் போது, அவரது மகள் பொம்மை நாயகி, செல்வாக்கு மிக்க இரண்டு உயர்சாதியைச் சேர்ந்த நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். சமூக அநீதி மற்றும் நீதி அமைப்பில் உள்ள தவறுகளுக்கு எதிராகப் போராட முன்வரும் ஒரு எளிய மனிதனுக்கு நடப்பது என்ன? அவரும் அவர் மகளும் அப் போராட்டத்தில் வெற்றி பெறுவார்களா?
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கால்ரா கூறுகையில், “பார்வையாளர்களுக்குத் தரமான பொழுதுபோக்கை வழங்கும் எங்கள் தமிழ் உள்ளடக்கம் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொருள் நிறைந்த கதைகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே ZEE5-இல், எங்களின் முயற்சியாகும். அயலி மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, பெண்ணை மையப் படத்தி அமைக்கப்பட்டுள்ள திரைப்படமான பொம்மை நாயகியை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தந்தை – மகள் உறவின் உணர்வுபூர்வமான அம்சத்தை இத் திரைப்படம் வெளிக் கொணர்கிறது. நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஒருபுறமிருக்க, ஒரு சமூகச் செய்தியையும் இப்படம் தருவது பார்வையாளர்கள் இணைப்பதாக உள்ளது. இத்திரைப்படம் குறித்த பார்வையாளர்களின் கருத்துகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.
தயாரிப்பாளர் பா.ரஞ்சித் கூறுகையில், “சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களிடம் தனது 9 வயது மகளுக்கு நடந்த அநீதிக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் எளிய, அப்பாவி மனிதனின் உணர்ச்சிகரமான கதையே பொம்மை நாயகி. இது ‘மதிப்பு மிக்க எவையும் எளிதில் கிடைப்பதில்லை’ எனும் கூற்றை நிரூபிப்பதாக உள்ளது. சிறந்த நட்சத்திர நடிகர்கள் பங்கு பெற்றுள்ள இத் திரைப்படத்திற்கு, திரையரங்கு வெளியீட்டின் போது பார்வையாளர்கள் கொடுத்த அதே அளவு அன்பை ZEE5-இலும் வழங்குவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இத் திரைப்படத்தை 190+ நாடுகளுக்கு எடுத்துச் சென்றதற்காகக் குழு மற்றும் தளத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். பார்வையாளர்களின் கருத்துகளின் எதிர்நோக்குகிறோம். ” என்றார்.
10 மார்ச் 2023 முதல் ZEE5 இல் பிரத்தியேகமாக ‘பொம்மை நாயகி’ திரைப்படத்தைக் காணத் தயாராகுங்கள்!
ZEE5 குறித்து:
உலகளாவிய உள்ளடக்க பவர்ஹவுஸான ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியாவின் சமீபத்திய மற்றும் நவீன OTT தளமான ZEE5, மில்லியன்கணக்கான பார்வையார்களுக்குப் பல மொழிகளில் கதைகளை எடுத்துரைக்கும் தளமாகும். நுகர்வோரை முற்றிலும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இத் தளம் 3,500-க்கும் மேலான திரைப் படங்கள், 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 அசல் மற்றும் 5 லட்சம் மணிநேரம் ஆன் டிமாண்ட் உள்ளடக்கம் என 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த அசல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், கல்வி, செய்திகள், நேரலை டிவி மற்றும் சுகாதாரம் மற்றும் வாழ்வு முறை போன்ற பல்வேறு வகையான உள்ளடக்கங்களை வழகுகிறது. உலகளாவிய தொழில்நுட்ப வல்லுனர்களின் கூட்டமைப்பில் உருவான ஒரு வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பானது பலவகை சாதனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயக்க முறைமைகள் மூலம் 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காணும் அனுபவத்தை ZEE5 மூலம் செயல்படுத்தியுள்ளது.