மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் தீர்மானங்கள்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் உலகநாயகன் நம்மவர் கமல் ஹாசன் தலைமையில் 21-09-2024 அன்று (சனிக்கிழமை) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு, மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1:
தன்னுடைய துறையில் அளப்பரிய சாதனைகளைச் செய்த தன்னிகரற்ற தமிழ் ஆளுமை நம்மவர் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்.
கடந்த காலத்தை அறிந்து, நிகழ் காலத்தைப் புரிந்து எதிர்காலத்தைக் கணித்துச் செயலாற்றுகிற முன்னோடி.
தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி சோதனைகளை வென்று சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டிய தனித்துவம் மிக்க தலைவர்.
தன்னை வளர்த்த தமிழ்ச் சமூகத்துக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்து அரசியல் இயக்கத்தைத் துவங்கியவர் நம்மவர் உலகநாயகன் கமல்ஹாசன்.
ஏற்றத்தாழ்வுகளும், பிரிவினைகளும் ஒழிந்து சமாதானமும் சகவாழ்வும் செழிக்கவும், மாறிவரும் உலகத்துக்குத் தமிழகம் தலைமையேற்கவும் மய்யவாதம் எனும் புதிய கொள்கையை கையில் எடுத்தவர்.
நமக்கெல்லாம் புதிய அரசியல் நாகரீகத்தைக் கற்றுக்கொடுத் தவர்.
மக்கள் நலன்களுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், ஜனநாயகத் துக்காகவும், மாநில உரிமை களுக்காகக் களத்தில் போராடு வதிலும் சிறிதும் சமரசம் செய்யாத மகத்தான தலைவர்.
இந்தப் போராட்டகுணம் இன்று நேற்று வந்தது அல்ல. அவருடைய 26-ஆவது வயதிலேயே ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங் களாக மாற்றினார்.
பெற்றால்தான் பிள்ளையா திட்டம் துவங்கி ரத்த தானம், கண் தானம் வரை எண்ணற்ற நற்பணிகளை இன்றுவரை செய்து வருகிறார்.
ஈழப் பிரச்னை, பாபர் மசூதி இடிப்பு, காவிரி பிரச்னை என ஒவ்வொரு பிரச்னையின்போதும் களத்தில் இறங்கி போராடியவர் நமது தலைவர்.
கொசஸ்தலை ஆறு, கஜா புயல், ஸ்டெர்லைட் போராட்டம், சிஏஏ போராட்டம், கிராமசபைகளுக்குப் புத்துயிர் ஊட்டியது, இல்லத்தரசி களுக்கு ஊதியம் எனும் சிந்தனையை
இந்தியாவெங்கும் கொண்டு சேர்த்தது என நம் தலைவர் ஆற்றிய மக்கள் பணிகளைப் பட்டியல் போடத் துவங்கினால், இன்றைய நாள் அதற்குப் போதாது.
நம்முடைய தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்று, இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 2:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய பொதுக்குழு, செயற்குழு மற்றும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர். களாகத் தேர்வானவர்கள், நமது தலைவர் நம்மவர் காட்டிய பாதையில் அர்ப்பணிப்புடன் உழைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களது பணி சிறக்க இந்த பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 3:
நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி யிலும் வருகிற ஜூன் 25-ஆம் தேதிக்குள் குறைந்தது 5000 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர்ச் சேர்க்கை முகாம் களை நடத்த வேண்டும். இந்தப் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 4:
வரவிருக்கும் தேர்தல்களைத் திறம்பட எதிர்கொள்ள பூத் கமிட்டி அத்தியாவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்த பட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 5:
நமது சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை சரிபாதி. சமுதாய வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
எந்தச் சமூகம் பெண்களுக்கு சம உரிமையை சம வாய்ப்புகளை வழங்குகிறதோ அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறதோ அந்தச் சமூகம்தான் நாகரீக சமுதாயம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தகுதியானது.
பெண்களுக்கு எதிராக நடை பெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. இந்தக் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண் களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள்,
வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை மக்கள் நீதி மய்யம் உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை, பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதோடு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கும் என்றும் இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 6:
ஒரு நாட்டின் வளர்ச்சி இளைஞர் களின் கையில்தான் இருக்கிறது. ஒரு மாநிலம் முன்னேறிய மாநிலமாகத் திகழ ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அவசியம். ஆனால், போதைப்பொருட்களின் புழக்கம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் சிதைப்பதாக உள்ளது.
போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு காவல்துறை தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் இந்தக் கொடிய பழக்கத்தின் பிடியில் சிக்கி இருக்கும் மாணவர்கள் மீட்கப்படுகிறார்கள்.
போதை வணிகத்தில் ஈடுபட்டு சமூகத்தைச் சீரழிக்கும் கொடிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. போதை வஸ்துக்களின் புழக்கமற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு எங்கள்
தலைவர் நம்மவர் அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றும் உறுதுணையாக நிற்கும் என்று இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 7:
இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்களை முறையாக அமல்படுத்த சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுக் கப்பட வேண்டியது அவசியம். பல்வேறு காரணங்களைக் காட்டி கணக்கெடுப்பை தாமதிக்கப் படுவது ஏற்புடையதல்ல. முழுமையான தகவல்களை உள்ளடக்கிய
சாதி வாரியான கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 8:
தேச வளர்ச்சிக்கு மாநிலங்கள் செலுத்தும் வரிகள் முக்கியப் பங்களிப்பாற்றுகின்றன. தமிழ்நாடு இந்தியாவில் அதிகமான வரிப்பங்களிப்பைச் செய்யும் முதன்மையான மாநிலங்களுள் ஒன்று.
ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உரிய நிதிப்பகிர்வை தீர்மானிப்பதில் தொடர்ந்து ஓரவஞ்சனை காட்டப்படுகிறது. ஒதுக்கிய நிதியை தருவதில் காலதாமதம் செய்வதும், மாநில அரசின் திட்டங்களுக்கு வந்து சேர வேண்டிய பங்களிப்பை இழுத்தடிப்பு செய்வதும் ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 9:
வேளாண் விளை பொருட்களுக். கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உரிய முறையில் நிர்ணயித்து, அதை சட்டப்பூர்வ மாக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயப் பெருமக்கள் தொடர் போராட்டங் களை நடத்தியும், இதுவரை அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தவாறு, சராசரி உற்பத்திச் செலவுடன், 50 சதவீத லாபத்தை அளிக்கும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உடனடியாக சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 10:
இலங்கை அரசு கடும் பொருளா தார நெருக்கடியில் தவித்த போதும், கரோனா காலத்திலும் அதிகப்படியான பொருளாதார உதவிகளை வழங்கியது இந்தியாதான். அந்த உதவியில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணமும் அடங்கும்.
ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு, நமது பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வது, நெடுநாட்கள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்வது தொடர் நிகழ்வாகி வருகிறது.
இதன் புதிய உச்சமாக தமிழக மீனவர்களுக்கு மொட்டையடிப்பது, அவர்களைக் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைப்பது போன்ற அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களையும், அத்துமீறல் களையும் மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்வதை யோ, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவதையோ இனியும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே சிறைபட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது உடைமைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றபடி இரு நாடுகளி டையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்கிற தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 11:
மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வதற்கான மகத்தான உரிமையை கிராம சபைகள் அளிக்கின்றன. தமிழ்நாட்டில் கிராமசபைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் நமது தலைவர், நம்மவர் அவர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
கிராம சபை என்பது உள்ளூர் அரசாங்கம் போன்றது. கிராமசபையில் இயற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதில் உறுதி காட்டினால் தான் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்யும் கிராம சபை, ஏரியா சபை ஆகியவற்றை மேலும் வலிமைப். படுத்த வேண்டும் என்று இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 12:
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங் களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல.
தேசம் வளர்ச்சியடைய வேண்டு மானால் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என முந்தைய நடுவண் அரசுகள் முயற்சிகள் எடுத்தன. ஜனத்தொகையைக் கட்டுப்ப டுத்தும் முயற்சிகளுக்குத் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முழுமையாக உடன்பட்டு செயலாற்றின.
இப்போது மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவது, தங்களது மாநிலங்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்கும் சூழலில், ஒருமித்த கருத்தின்றி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறை வேற்ற முயற்சிக்கக் கூடாது என்கிற தீர்மானம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 13:
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல்.
தேர்தலை ஒரே கட்டமாக நடத்த ஆற்றலற்ற மைய அரசு, ஒரே நேரத்தில் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்போவதாகச் சொல்வது கேலிக்கூத்து.
உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி சிறப்பாக நடத்தப்பட்டு வருகையில் அந்த அருமையான நடைமுறையை சிதைக்கும் முயற்சிதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அழகான மாளிகையை சிதைத்துவிட்டு குட்டிச் சுவரைக் கட்டிப்பார்க்கும் முட்டாள்தனமான முடிவுதான் இது.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மாநிலக்கட்சிகள் சிறப்பான நல்லாட்சியை கொடுக்காமல் இத்தகைய தேர்தல்களை எதிர்கொள்ள முடியாது எனும் கட்டாயம் இருக்கிறது.
ஒருமுறை வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களைச் சந்திக்கவே வேண்டியதில்லை எனும் அணுகூலம் மக்கள் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை மாநிலக் கட்சிகளின் எதிர்காலத்தையும், தேவையையும் இல்லாமல் ஆக்கிவிடக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களும், நம்பிக்கைகளும், பருவ காலங்களும், நில அமைப்பும் கொண்ட பன்மைத்துவ தேசத்தின் ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சியை பன்மைத் துவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜனநாயகத்தின் காவல் வீர்ர்களான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 14:
இந்தியா இளைஞர்களின் தேசம். இந்தியாவை மாற்றுவதற்கு ஆற்றல் மிகு 100 இளைஞர்கள் போதும் என்றார் விவேகானந்தர். இன்றைய இளைஞர்கள் கல்வியிலும், தொழில்நுட்பத் திலும் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். தங்களது துறைகளில் இளம் வயதிலேயே பற்பல சாதனைகளைப் படைத்துக்காட்டுகிறார்கள்.
அரசியல் புதிய பரிமாணம் அடைந்து வரும் சூழலில் இத்தகு ஆற்றல் மிகு இளைஞர்களின் பங்களிப்பை அரசியலில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பு 25 என்பது என்பது சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இன்றைய கால மாற்றத்தையும், கல்வி வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு, இளைஞர்கள்
தேர்தல்களில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்க வேண்டும். இந்த மாற்றத்தின் வழியாக பொதுவாழ்வில் ஈடுபடவும், மக்கள் சேவை யாற்றவும் லட்சக்கணக்கான இளைஞர்கள் முன்வருவார்கள்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 15:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, வருவாய் ஏற்றத்தாழ்வு, தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் காலியான பணியிடங்கள் ஆகிய காரணங்களால் நாட்டில் பொருளா ஏதார ரீதியாக நலிவடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களுக்கு மாற்று வாய்ப்புகள் அமையும் வரை சமூகப்பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. அரசின் நலத்திட்டங்கள் நலிவடைந்த மக்களை நேரடியாகச் சென்று அடையும்படி அனைவருக். குமான அடிப்படை வருமான அட்டை (Universal Basic Income Card)’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த முறையில் வறிய நிலையில் இருப்பவரைக் கண்டறியவும், அவர்களுக்கு நேரடியாக உதவவும், அரசின் உதவிகள் அந்நபரின் வாழ்விலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கண்டறியவும், திட்டங்களை வகுக்கவும் இந்த UBI திட்டம் பெரும் பயனளிக்கக் கூடும். மத்திய அரசு நிபுணர்களைக் கொண்டு ஒரு குழுவை உருவாக்கி இதன் சாத்தியங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 16:
மருத்துவ ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் செய்த முன்னோடி நமது தலைவர். அதுமட்டுமல்லாமல் ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் குறித்தெல்லாம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.
உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசையும், தமிழக மக்களையும் பாராட்ட மக்கள் நீதி மய்யம் கடமைப்பட்டுள்ளது.
நமது தலைவர் நம்மவரின் வழிகாட்டுதலின் படி மக்கள் நீதி மய்யமும், மோகன் பவுண்டேசனும் இணைந்து நடத்திய உடல் உறுப்புகள் தான முகாமில் 1081 பேர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். பத்தாயிரம் பேர் என்ற இலக்குடன் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
– ஊடகப்பிரிவு
மக்கள் நீதி மய்யம்