
ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்தது திரைப்படம் .மீண்டும் திரை அரங்குகள் திறக்கப் பட்ட பின்னர் மேலும் சில காட்சிகள் கூடி இந்த படம் வெளி வந்தது. இடைவெளிக்குப் பிறகும் ரசிகர்கள் தந்த மாபெரும் ஆதரவு படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
“இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெளியான மரகத நாணயம் திரைப்படத்துக்கு கிட்டி உள்ள ஆதரவு எனக்கு ஒரு பக்கம் பெருமையை தந்தாலும் , இதை போல தரமான படங்களை தொடர்ந்து தர வேண்டும் என்கிற பொறுப்பையும் கூட்டி உள்ளது. அறிமுக இயக்குநர் ஏ ஆர் கே சரவண் எங்கள் நிறுவனத்துக்கு பெருமை சேர்த்து உள்ளார். இவரை போன்ற திறமையான இயக்குநர்களை எங்கள் நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்யும்” என பெருமையுடன் கூறினார் தயாரிப்பாளர் டில்லி பாபு.