மறைந்த ஓவிய மாமேதை மணியம் அவர்களின் நூற்றாண்டு விழா ‘மணியம் 100 ‘ விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அதை முன்னிட்டு அவரது மகன் ஓவியர் மணியம் செல்வன் முன்னெடுப்பில் ஒரு கலைவிழா இன்று எடுக்கப்பட்டது.
மணியம் நூற்றாண்டு விழாக்குழுவினர் அவரது ஓவியங்கள் அவரது வாழ்க்கை மற்றும் கலைப் பயணத்தின் சாதனைப் பக்கங்களை ‘மணியம் 100 ‘ -சரித்திரம் படைத்த சித்திரங்கள் என்கிற நூலாக உருவாக்கியுள்ளனர்.
அதன் வெளியீட்டு விழா இன்று சென்னை மயிலாப்பூர் பி .எஸ் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தக்ஷிணாமூர்த்தி அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் திரைப்பட நடிகர் ஓவியர் பேச்சாளர் சிவகுமார் நூலை வெளியிட்டார். கல்கியின் பேத்தி சீதாரவி நூலைப் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் நடிகர் சிவகுமார், எழுத்தாளர்கள் சிவசங்கரி, திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர் ஓவியர் மதன் ,கல்கி சீதாரவி,
ஓவியர்கள் ஜெயராஜ், மாயா, ராமு ,அமுதபாரதி ஆகியோர் கலந்து கொண்டு ஓவியர் மணியம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
விழாவில் ஓவியர்கள் மாயா, ஜெயராஜ் ,ராமு, ஓவியக்கவிஞர் அமுத பாரதி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மூத்த எழுத்தாளர் சுப்ர.பாலன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் முன்னதாக திருமதி தாரிணி பாலகிருஷ்ணன் இறைவணக்கம் பாட ,திருமதி சுபாஷினி பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.
ஓவியம் மணியம் செல்வன் ஏற்புரை நிகழ்த்தினார். அவரது மகன் சேஷாத்ரி சுப்பிரமணியம் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பத்மா வெங்கடேசன் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் ஏராளமான எழுத்தாளர்களும் ஓவியர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். விழாவில் 90% பிரபல முகங்களாகவே இருந்தன . சரியான நேரத்தில் தொடங்கி சரியான நேரத்தில் நிறைவு பெற்றது நிகழ்ச்சியின் சிறப்பு.