ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் சார்பாக கோபிகாந்தி தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் “வீரக்கலை”. இப்படத்திற்கு கதையையும் கோபிகாந்தியே எழுதியுள்ளார். சாதாரண சாக்கு தைக்கும் தொழிலாளியாக இருந்து இன்று சினிமாத்துறையில் தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் கதாசிரியராகவும், வினியோகஸ்தராகவும் “முதல் மாணவன்” திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கால்பதித்தவர் இவர்.
தற்பொழுது “வீரக்கலை” என்ற திரைப்படத்தில் மலைவாழ் விறகு வெட்டும் இளைஞனாக நடித்து வருகிறார். “மனதில் நம்பிக்கை வைத்து முயற்சி செய்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனது RSG பிக்சர்ஸ் நிறுவனம் மூலமே “தொழில்காரன்” என்ற திரைப்படத்தையும் தயாரித்து, ஹீரோவாகவும் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து வெளிநிறுவன படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளது.
அகில உலக சமூக சேவை மைய நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படும் கோபிகாந்தி தனது திரைப்படங்களிலும் சமூக சிந்தனைகளுடன் கூடிய கதைகளையே தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். “தொழில்காரன்” திரைப்படத்தில் “விவசாயத் தொழிலாளியாகவும்” நடிக்க உள்ளார். கோபிகாந்தியின் “வீரக்கலை” “தொழில்காரன்” இரண்டு படங்களையும் கார்ப்பரேட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.
RSG பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் எண்ணற்ற கலைஞர்களுக்கு சினிமா வாய்ப்பை கோபிகாந்தி வழங்கியுள்ளார். சிறிய பட்ஜெட் படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் அதுபோன்ற படங்களையே தயாரித்து நடித்து வருகிறார் .தற்போது “வீரக்கலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் குழந்தைகளுக்கான திரைப்படம் ஒன்றையும் கோபிகாந்தியின் RSG பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. “வீரக்கலை” திரைப்படத்தில் “மலைவாழ் விறகு வெட்டும் இளைஞன் மாநில சண்டைப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் மலையில் தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறான்”. அந்த முயற்சியில் அவன் எவ்வாறு வெற்றி பெறுகிறான், என்ற மையக் கதைக்குள் காதல் , காமெடி, சென்டிமெண்ட் என ஜனரஞ்கமான முறையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சமீபத்தில் காரைக்கால் திருநள்ளாறில் “வீரக்கலை” படத்தின் பூஜையை நடத்தியுள்ளார். கேரள மாநிலம் முணாறில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் இத் திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கோபிகாந்தி தெரிவித்தார். “வீரக்கலை” திரைப்படத்தில் பத்திரிகையாளர் பாலபாரதி “தொடுதிரை நான் தொடுவிரல் நீ…..” என்ற குத்துப் பாடலை எழுதியுள்ளார் “வீரக்கலை” படத்தை அறிமுக இயக்குநர் ராஜ் இயக்குகிறார். கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ஜெஸி இசையமைக்கிறார், கதாநாயகியாக ப்ரியா அறிமுகபடுத்தப்படுகிறார். மேலும் பல்வேறு கலைஞர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் பணிபுரிய உள்ளதாக கோபிகாந்தி தெரிவித்தார்.